கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தில் அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 3) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ தாக்கல் செய்த இந்த வழக்கின் தகுதி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். ஆனால், விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் முன், அ.தி.மு.க மற்றும் எடப்பாடி கே.பழனிசாமியின் கருத்தை கேட்க விரும்புகிறேன் என்று கூறினார்.
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராகவும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்த தீர்மானத்துக்கு எதிராகவும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பி.எச். மனோஜ் பாண்டியன் தொடர்ந்த உரிமையியல் வழக்கில் மனோஜ் பாண்டியன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமாரிடம், பழனிசாமி தரப்பைக் விசாரிக்காமல், பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்று இடைக்காலத் தடை விதிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
அ.தி.மு.க மற்றும் பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதம் குமாருக்கும், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் சி.எஸ். வைத்தியநாதன் நோட்டீஸ் அளித்து அவர்களுடைய பதில் பிரமாணப் பத்திரங்கள் குறைந்த பட்சம் இரண்டு நாட்களுக்குள், மார்ச் 17ம் தேதி அடுத்த விசாரணைக்கு முன்பாண்டியன் தரப்பு வழக்கறிஞர் எஸ். இளம்பரதியிடம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட உரிமையியல் வழக்கின் தகுதி குறித்து தற்போதைக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், பிரதிவாதிகளால்- எதிர் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்த பிறகே முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெளிவுபடுத்தினார்.
முன்னாள் எம்.பி, தற்போதைய எம்.எல்.ஏ பி.எச். மனோஜ் பாண்டியன், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை ரத்து செய்த தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், அ.தி.மு.க-வின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இடைக்கால உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“