EWS reservation in All India Quota medical seats : உச்ச நீதிமன்றத்தின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல், அகில இந்திய இட ஒதுக்கீட்டில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொருளாதார ரீதியாக நலிவடைந்தோருக்கு) 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய் கிழமை தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ஜூலை 29ம் தேதி அறிவிப்பானது பட்டியல் இனத்தோருக்கு 15% இட ஒடுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27%-மும் வழங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கிறது என்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜீ மற்றும் நீதிபதி ஆதிகேசவலு கூறியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடும் சட்டத்திற்கு உட்பட்டது என்று கூறிய அவர்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் வழங்கக் கூடாது என்றும் கூறினார்கள்.
இட ஒதுக்கீடு 50%-ஐ தாண்டக் கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டினை அறிவிப்பதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை மத்திய அரசு பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
உயர்மட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிரான திமுகவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கும் போது இந்த உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன. அகில இந்திய இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் மூலம் வழங்கப்படுவதால் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திமுக வலியுறுத்தியது.
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக மட்டுமே ஒரு வழக்கை தாக்கல் செய்து உத்தரவுகளைப் பெற்றபோது, பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் மத்திய அரசின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். தற்போதைய அவமதிப்பு வழக்கும் ஓபிசியினருக்கான மேம்பட்ட இட ஒதுக்கீடு கோரி மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.
அவருடைய வாதத்தில் சில இடங்களில் முரண்பட்ட அமர்வு, ஓ.பி.சியினருக்கு 27% வழங்க முடியும் என்று தெரிவித்தது. அதே நேரத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அவருடைய வாதத்தில் அமர்வு உடன்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil