/indian-express-tamil/media/media_files/2025/07/08/kn-nehru-brothers-2025-07-08-04-09-44.jpg)
இந்த வழக்கில் மோசடி எதுவும் நடைபெறவில்லை என்றும், அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி கடன் தொடர்பாக தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டி.வி.எச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா சோலாா் இன்ஃப்ரா, எனா்ட்டியா வின்ட் இன்ஃப்ரா, ட்ரூ வேல்யூ ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிறுவனங்களில் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி எம்.பி-யுமான கே.என்.அருணும் நிா்வாகியாக உள்ளாா்.
இந்நிலையில், 2013-ல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து ரூ.30 கோடி பெற்ற கடனை, வேறு நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதாக ரவிச்சந்திரன் மீது புகார் எழுந்தது. இது குறித்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் சி.பி.ஐ, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 போ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் 2012-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேருவின் தொடர்புடைய இடங்களில் இ.டி சோதனை நடத்தியது. இதனிடையே சி.பி.ஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரவிச்சந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திங்கள்கிழமை (07.07.2025) தீர்ப்பளித்த நீதிபதி டி.சக்கரவர்த்தி, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தார். இதில் ரூ.15 லட்சத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், ரூ.15 லட்சத்தை தமிழ்நாடு சமரச தீர்வு மையத்திற்கும் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழக்கை ரத்து செய்தார்.
மேலும், இந்த வழக்கில் மோசடி எதுவும் நடைபெறவில்லை என்றும், அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.