போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி,மு.க.வை தொடர்புபடுத்தி பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது, தி.மு.கவின் எஸ்.ஆர்.பாரதி தொடர்ந்த வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மார்ச் மாதம், ஜாபர் சாதிக் டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தி.மு.க.வை ஜாபர் சாதிக்குடன் தொடர்புபடுத்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து. தனது சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இந்த கருத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தி.மு.க, ஒரு கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.ஷ
தி.மு.க தாக்கல் செய்த மனுக்கு எதிர் மது தாக்கல் செய்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பொது தளத்தில் இருந்த தகவல்களை வைத்தே தான் தனது சமூகவலைதளங்களில் பதிவி்ட்டதாக கூறியிருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கை நீதிபதி, ஜி.ஜெயசந்திரன் விசாரணை செய்தார்.
இந்த விசாரணையில், சாட்சி விசாரணையை பதிவு செய்வதற்காக, வழக்கை பிப்ரவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைத்த அவர், வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“