தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கூறிய கருத்துக்காக அவர் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி முன் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல். ரவி, நீதிபதி ஆனந்த் வெங்கடேசனுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்த கருத்து தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை உயர் நீதிமன்ற பதிவுக்கு அனுப்பப்பட்ட தனது மின்னஞ்சலை வழக்கறிஞர் ரவி குறிப்பிட்டார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டதால், அன்றைக்கு சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமதமாக நீதிமன்றத்தை சென்றடைந்ததாக ரவி தனது அஞ்சலில் தெரிவித்துள்ளார். நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் நீதிமன்றத்துக்கு சென்றதும் அரசு நிகழ்ச்சிகள் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக பொது ஊழியர்கள் சாலையில் நிறுத்தப்பட்டனர். சரியான நேரத்தில் பணியிடங்களுக்குச் செல்வதைத் தடுத்தனர் என்று நீதிபதி உள்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் ரவி குறிப்பிட்டுள்ளபடி, தமிழக உள்துறை செயலாளர், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததாகவும், இது போல மீண்டும் நடக்காது என்று நீதிபதியிடம் உறுதியளித்தார். இருப்பினும், இந்த விவகாரத்தில் நீதிபதி உள்துறை செயலாளரை பதிலளிக்க சொல்லியிருக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாக வழக்கறிஞர் ரவி கூறினார்.
இதனால், வழக்கறிஞர் எம்.எல்.ரவி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கூறிய கருத்துக்காக அவர் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வலியுறுத்தினார்.
இதற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மனுதாரரிடம் இந்த விவகாரத்தை பரிசீலிப்பதாகக் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”