டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் என்று சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக் கொண்டது.
முன்னதாக,பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது தமிழக குற்றப்பிரிவு சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 354 ( பெண்ணை தாக்குவது, தாக்க முனைவது) தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு) சட்ட பிரிவு 3 மற்றும் 4 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிப்ரவரி 22 ம் தேதி தாஸின் மீது முறையான புகார் அளிக்க சென்னை செல்லும் வழியில் பாதிக்கப்பட்டவரின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற செங்கல்பட்டு எஸ்.பி. டி கண்ணன் ஐ.பி.எஸ்ஸின் பாத்திரத்தையும் இந்த குழு விசாரிக்கும்.
பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி, தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து சென்னை டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிக்க சென்னை வந்துள்ளார். அப்போது டிஜிபி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தலின்பேரில், அவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுத்து நிறுத்திய அம்மாவட்ட எஸ்பி டி கண்ணன் என்பவர், பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளிப்பதை தடுக்கும் நோக்கில், டிஜிபி ராஜேஷ் தாஸிடம் போனில் பேசும்படி வற்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“