Advertisment

சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்களா? ஐகோர்ட் கேள்வி

சிறுபான்மையினர், இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது; ஐகோர்ட் மதுரைக்கிளை கருத்து

author-image
WebDesk
New Update
Madurai

சிறுபான்மையினர், இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது; ஐகோர்ட் மதுரைக்கிளை கருத்து

மனிதாபிமானம் இல்லையென்றால் இந்த உலகில் எவரும் வாழ முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

திருநெல்வேலியைச் சேர்ந்த ஹாஜா சரீஃப் 2007-2008 -ம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல் துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் ஹாஜா சரீஃப் மனித நீதி பாசறை என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ளார். எனவே இதனை காரணமாக கூறி, அவருக்கு 5 ஆண்டுகளுக்கான பதவி உயர்வு, பணபலன்கள் வழங்கப்படவில்லை என அவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, காவலர் ஹாஜா சரீஃப் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இது ஏற்றுகொள்ள முடியாதது. அவர் அடைந்த மனவேதனையை உணர முடிகிறது. எனவே அவருக்கு பதவி உயர்வு மற்றும் பணபலன்களை வழங்க வேண்டும். மேலும் 4 வாரத்திற்குள் பணபலன்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் இந்த விசாரணையின்போது நீதிபதி பட்டு தேவானந்த், சிறுபான்மையினர், இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கின்றோம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகாரிகளும் தற்காலத்திற்கு ஏற்றார்போல தங்களது சிந்தனைகள் மற்றும் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதிகாரிகள் செய்யும் தவறுகளால் மனுதாரரை போல எந்த தவறும் செய்யாதவர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

உலகில் எவரும் பிறக்கும் போதே குறிப்பிட்ட மதம், சாதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து பிறப்பது இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டிற்கு சேவை செய்வதற்கு, தங்களது திறனை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இந்த உலகில் யாரும் யாருக்கும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை. மனிதாபிமானம் இல்லையென்றால் இந்த உலகில் எவரும் வாழ முடியாது. இவ்வாறு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment