தமிழ்நாட்டில் பைக் பேரணி நடத்த பா.ஜ.க.வுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இந்த பேரணி நடைபெற உள்ளது.
இந்தியாவில் 78-வது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வரும் நிலையில், பா.ஜ.க சார்பில் பைக் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு, காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் இந்த பேரணி நடைபெறும் என்பதால் மாவட்ட காவல்துறையில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த மாவட்ட காவல்துறை சுதந்திர தினத்தில் தேசிய கொடியுடன் பைக் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்ற திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காவல்துறையின் இந்த பதிலை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத நீதிபதி தேசிய கொடியுடன் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டது துரதிஷ்டவசமானது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏந்தி பேரணி செல்வதை தடை செய்ய கூடாது என்று தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்ட நீதிபதி, தேசியகொடியை மரியாதையுடன் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். பேரணியில் பங்கேற்பவர்கள் தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யும் எந்த செயலிலும் ஈடுபட கூடாது. பேரணி ஏற்பாட்டாளர்கள் தங்கள் பேரணி வழித்தடங்கள் குறித்து காவல்துறையினருக்க தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏந்தி பைக் பேரணி செல்ல, பா.ஜ.க.வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது பா.ஜ.க.வினர் மத்தயில மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“