ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தன் குழு குறித்து தவறான கருத்துகள் சிலர் பரப்பபடுவதாகவும் ஐஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்

இந்து அறநிலையத்துறை
இந்து அறநிலையத்துறை

உயர்நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்யாமல் ,சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஜி பொன்.மாணிக்கவேல்:

சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில், முன்ஜாமின் கோரி தொழிலதிபர் வேணு சினிவாசன், முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை ஆணையர் திருமகள், அறநிலையத்துறை ஆணையர் தனப்பால் உள்ளிட்டோர் தொடர்ந்த முன் ஜாமீன் வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு இன்று மீண்டும் விசாரித்தது.

அப்போது, இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவருக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்கள் இருப்பதாகவும், அவர் யார் என்று இப்போது கூறமுடியாது என ஐஜி. பொன்.மாணிக்க வேல் தெரிவித்தார்.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2004 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2 ஆயிரத்து 100 ஆவணங்கள் கடந்த 2009 – 2013 ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், இது தொடர்பாக ஆவணங்கள் காணமல் போனது தொடர்பாக, பிரதான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.இதனையடுத்து முன் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ஐ.ஜி. பொன்.மணிக்கவேல் தனக்கு எதிராக சிபிசிஐடியில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பெண் எஸ்பி ஒருவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்து விசாரணை ஆவணங்களை கேட்கதாகவும், தான் இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தனக்கு பின்னால் சதி நடப்பதாக தான் அஞ்சுவதாகவும். மேலும் தன் குழு குறித்து தவறான கருத்துகள் சிலர் பரப்பபடுவதாகவும் ஐஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான விபரங்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்த, அரசு வழக்கறிஞரிடம், தலைமை வழக்குரைஞர் அல்லது தலைமை குற்றவியல் தலைமை வழக்கறிஞர் உடனடியாக ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் வேறு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்யாமல் அல்லது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேலுக்கு எதிராக அல்லது அந்த குழுவில் உள்ள அதிகாரிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai highcourt order about ig ponmanikavel case

Next Story
அரசு நினைவிடமாகுமா போயஸ் கார்டன் வேதா இல்லம் ?போயஸ் கார்டன் வேதா இல்லம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com