நாட்டின் மற்ற பெருநகரங்களை விட சென்னையில் மொத்த மக்கள் தொகையில் அதிக அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவின் போர்டலில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, சென்னையில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 24.4% ஆக உள்ளது. இது மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவை விட அதிகம். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 7.5% மட்டுமே என்றாலும், இது மற்ற நகரங்களை விட அதிகம்.
சென்னை 80,00,000 பேருடன் மிகக் குறைந்த மக்கள் தொகையை கொண்டது. மும்பையில் 2 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். அதேபோல் டெல்லியில் 3 கோடிக்கும் , பெங்களூருவ1கோடியே 20 லட்சத்திற்கும், ஹைதராபாத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் சென்னை தான் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 35.1 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 10.8 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர். அனைத்து நகரங்களிலும் 45-59 வயதுடையவர்களின் தடுப்பூசி விகிதம் சிறந்ததாக இருந்தாலும், சென்னை 57.8 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட்டாக சென்னை இருந்ததால், அரசு தொடர்ந்து கண்காணித்து தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரித்தது. சென்னை மாநகராட்சியும் தினசரி தடுப்பூசி அட்டவணையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது .மாநகராட்சி அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தடுப்பூசி விநியோகத்தையும் கண்காணித்து வருகின்றனர் என கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil