சென்னை ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே அனுமதி; சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு

Chennai hotels parcel only, full curfew will not enforced, commissioner: தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்காது. ஆனால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சென்னையில் உணவகங்களில் பார்சல் உணவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,

தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்காது. ஆனால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஊரடங்கு குறித்து நிறைய வதந்திகள் வருகின்றன. குரூரமான மனப்பான்மை உள்ளவர்களால்தான் இத்தகைய வதந்திகளை பரப்ப முடியும்.

இன்னும் தீவிரமான கட்டுப்பாடுகள் குறித்து இன்று சில அறிவிப்புகள் வர உள்ளன. ஆனால், அது ஊரடங்கு அல்ல. திருமண நிகழ்வுகள், உணவகங்கள், துக்க நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த இடங்களில் இன்னும் தீவிர கட்டுப்பாடுகள் வரும். இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

ஷாப்பிங் மால்கள், உள்ளிட்டவற்றில் முகக்கவசம் அணியாவிட்டால் வாடிக்கையாளர்களை நிச்சயம் அனுமதிக்கக் கூடாது. கூட்டமாக அனுமதித்தால் முதலில் அபராதம் விதிப்போம். அடுத்த முறை மூடிவிடுவோம். இது சிரமம் ஏற்படுத்துவதற்காக அல்ல, ஒழுக்கத்தைக் கொண்டு வருவதற்காகத்தான்.

சென்னையில் உணவகங்களில் பார்சல் உணவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுதவிர, அன்றாட கொரோனா தடுப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும். இவற்றையெல்லாம் செய்தால்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.

மாநகராட்சிக்கு சொந்தமாக 240 விளையாட்டுத் திடல்கள் உள்ளன. அங்கு கூட்டம் அதிகமாக கூடுவதாக தகவல் வருகிறது. எனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முழுவதுமாக அவற்றை மூடவும் முடியாது. மக்கள் கட்டுப்பாடுகளுடன் வெளியில் செல்ல வேண்டும்.

சென்னையில் வீடு, வீடாக சென்று பரிசோதிக்க 11 ஆயிரத்து 500 பேர் களத்தில் உள்ளனர். தினமும் அறிகுறி உள்ள 500 பேரை இத்தகைய சர்வே மூலம் கண்டறிகிறோம்.

சென்னையைப் பொறுத்தவரையில் கோவிட் கேர் சென்டர்களில் 12 ஆயிரத்து 600 படுக்கைகள் உள்ளன. அதில், இப்போதைக்கு 1,104 பேர் தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் 20 ஆயிரம் பேர் இப்போதைக்கு சிகிச்சையில் உள்ளனர். இதில் 80% பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். மீதம் உள்ள 20% பேர் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கோவிட் கேர் சென்டர்களில் உள்ளனர்.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai hotels parcel only full curfew not enforced commissioner

Next Story
விவேக் அப்பவே அப்படி ..! 7 வயதில் பிரதமருக்கு கடிதம்… இந்திரா காந்தி எழுதிய பதில்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express