சென்னை ஐஐடி மாணவரின் உடல் ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி-எம்) படித்து வந்த மாணவர் ஒருவரின் உடல், ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய ரயில் தண்டவாளத்தின் அருகே, சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த மாணவர் அக்டோபர் 3-ம் தேதி டெல்லிக்கு சென்றுவிட்டு, ரயிலில் ஊருக்குத் திரும்பிக் திரும்பி வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இறந்தவர் பி.டெக் மெட்டலர்ஜிகல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர் என்று கூறியுள்ள ஐஐடி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் “இளம் மாணவனின் மறைவு கல்வி நிறுவனத்திற்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பெரும் இழப்பாகும்.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஐஐடி மெட்ராஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த துரதிர்ஷ்டவசமான தருணத்தில் குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“