இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் நெல் கழிவுகளை மறுசுழற்சி செய்து தொழில்துறை பயன்பாட்டிற்கான மூலப்பொருட்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இத்தொழில்நுட்பம் நெல் கழிவுகளை வைத்து பயன்பெற வைப்பதால், இது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணுகுமுறை வட இந்தியாவில் பண்ணைக் கழிவுகளை எரிப்பதையும் குறைக்க முக்கிய பங்களிப்பை அளிக்கும் என்று ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் கேபாசிட்டர்கள் தயாரிப்பதில் முக்கிய அங்கமான பயன்படுத்தக்கூடிய கார்பனை உருவாக்க, கரிமக் கழிவுகள், சமலயறையில் உருவாகும் குறிப்பிட்ட கழிவுகள் ஆகியவற்றின் மூலம் புதிய 'பண்ணை-எனர்ஜி சினெர்ஜி'யை ஆராய்ச்சியாளர்கள் வளர்த்து வருகின்றனர்.
நெல் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஆக்டிவேட்டட் கார்பனில் சூப்பர் கேபாசிட்டர்களாக செயல்படும். இது, மின்னணுவியல், ஆற்றல் மற்றும் விவசாயத் துறைகளில் நுகர்வோருக்கு பலவகையில் பயன்பெறும்.
தற்போது, இந்தியாவில் உற்பத்தியாகும் நெல் கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 760 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆகும். வைக்கோலை மண்ணுக்குள் வைப்பதற்கு, வைக்கோலை எரிப்பதை மிகவும் குறைந்த விலை மற்றும் திறமையான மாற்றாக விவசாயிகள் கருதுகின்றனர். இது கணிசமான மாசுபாடு மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சனையை விளைவிக்கிறது.
இதனால் இந்தியாவிற்கு மட்டும் தோராயமாக ரூ.92,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது கொண்டுவந்துள்ள முயற்சியால் உருவாக்கப்படும் கார்பனின் உற்பத்தி அளவை ஆராய்வதற்கும் பின்பற்றப்படும் அணுகுமுறையைப் பயன்படுத்துவதே எதிர்காலத் திட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil