சென்னை ஐ.ஐ.டி., மாணவர் தற்கொலை செய்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஐ.ஐ.டி.,யில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்துவரக்கூடிய இரண்டு மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சித்து ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
விடுதி அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மருத்துவமனையில் மாணவர் ஸ்டீபன் உயிரிழந்தார்.
ஆராய்ச்சி படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாத காரணத்தால் மாணவர் மன உளைச்சலில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.