scorecardresearch

கொஞ்ச நேரம் இளைப்பாற… பயணிகளுக்கு சென்னை ஏர்போர்ட் புதிய ஏற்பாடு

Chennai Tamil News: சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிக்கும் மக்களுக்காக ‘ஸ்லீப்பிங் பாட்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 'ஸ்லீப்ஸோ' வசதி
சென்னை விமான நிலையத்தில் 'ஸ்லீப்ஸோ' வசதி

Chennai Tamil News: சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிக்கும் மக்களுக்காக ‘ஸ்லீப்பிங் பாட்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் படுக்கை, ரீடிங் லைட்டுகள், சார்ஜிங் வசதிகள், யூ.எஸ்.பி. சார்ஜர், லக்கேஜ் வைக்கும் இடம், விளக்கு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கேப்சுளிலும் ஒரு நபர் மற்றும் (12 வயதுக்கு உட்பட்ட) குழந்தை தங்கலாம் என்று கூறப்படுகிறது.

பயணிகள் தங்களின் இணைப்பு விமானத்திற்காகக் காத்திருக்கும்போது, இவ்வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டைய நாடான ஜப்பானில் இவ்வசதி முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களின் கருத்தைப் பெற்று, இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டில் பயணிகளுக்காக ‘ஸ்லீப்ஸோ’ என்று உருவாக்கியுள்ளனர்.

அதிநவீன வசதிகளைக் கொண்ட ‘ஸ்லீப்பிங் கேப்சுல்கள்’, உள்நாட்டு முனையத்தின் வருகைப் பிரிவில், பேக்கேஜ் பெல்ட் எண் 1ற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ‘ஸ்லீப்பிங் பாட்’ வசதியை மக்கள் ஒரு மணிநேர அடிப்படையில் பெறலாம் அல்லது ஆன்லைன் முன்பதிவு மூலமும் பதிவு செய்யலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்கள் காத்திருப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள், அவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது தான் இந்த வசதி. ஓய்வெடுக்க பயணிகள் இனிமேல் ஹோட்டல்களைத் தேடுவதை தவிர்த்து விமான நிலையத்திலேயே ஓய்வெடுத்தால் நேரம் வீணாவதைத் தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த வசதியை சென்னை விமான நிலைய இயக்குநர் டாக்டர் சரத் குமார், மற்ற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai international airport introduced sleepzo facility