scorecardresearch

பயணிகள் தலையில் சுமை: விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிரடி உயர்வு

உள்நாட்டு விமான பயணிக்கு ரூ.90 உயர்வு என்றும் சர்வதேச விமான பயணிக்கு ரூ.150 உயர்வு என்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

chennai airport

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தில், விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் உயர்த்தி வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் வெளியீட்டுள்ள உத்தரவில், உள்நாட்டு விமான பயணிக்கு ரூ.295 என்றும், சர்வதேச பயணிக்கு ரூ.450 என்றும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, உள்நாட்டு விமான பயணிக்கு ரூ.90 உயர்வு என்றும் சர்வதேச விமான பயணிக்கு ரூ.150 உயர்வு என்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டணம், அவர்கள் பயணிக்கும் விமான டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கப்படும்.

மேலும், இந்த பயணி புறப்படும் விமான நிலையத்தில் மட்டும் வசூலிக்கப்படும்.

கட்டண உயர்வு சென்னை விமான நிலையத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அமல்படுத்தப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai international airport maintenance fee increased