Advertisment

சென்னை கலாஷேத்ரா பாலியல் சர்ச்சை: முக்கிய நிர்வாகி தமிழக டி.ஜி.பி-யுடன் சந்திப்பு

பாலியல் புகார்கள் குறித்து மாணவர்கள் யாரும் இனி பேசவோ, இணையத்தில் பகிரவோ கூடாது என்று கலாச்ஷேத்ரா நிர்வாகம் கட்டளையிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai: Kalakshetra director met DGP Sylendra Babu Tamil News

Kalakshetra director Revathi Ramachandran met state police chief C Sylendra Babu Chennai Tamil News

Kalakshetra Foundation, Cultural center in Chennai Tamil News: புகழ்பெற்ற சென்னை கலாஷேத்ரா பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாகவும் இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார்கள் எழுந்தது. ஆனால் கலாஷேத்ரா நிர்வாகம் இத்தகைய புகார்களை திட்டவட்டமாக மறுத்தது. நேற்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சி சைலேந்திர பாபுவைச் சந்தித்த கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், தங்களது நிறுவனத்தில் ஆசிரியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து “விளக்கத்தை” சமர்ப்பித்தார்.

Advertisment

முன்னதாக, கடந்த புதன்கிழமை, தேசிய மகளிர் ஆணையம் அதன் ட்விட்டர் பக்கத்தில், அதன் தலைவரான ரேகா சர்மா, பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஆசிரியைக்கு எதிராகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றியதற்காக கலாஷேத்ரா இயக்குநருக்கு எதிராகவும் எப்ஐஆரில் தொடர்புடைய விதிகள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பேசுகையில், "அந்த விளக்கத்தில் உள்ளக புகார்கள் குழு அறிக்கையின் நகல் இருந்தது. அதில் குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த பெண் மறுத்துள்ளார். குழு உறுப்பினர்களின் முதற்கட்ட விசாரணைகள் வளாகத்தில் "பாலியல் துன்புறுத்தல்" பற்றி புகார் எதுவும் இல்லை என்று கூறியது. நாங்கள் தேசிய மகளிர் ஆணையத்தின் முறையான புகாருக்காக காத்திருக்கிறோம். புகாரின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.

கலாஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் எஸ் ராமதுரை இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்க முன்வரவில்லை. எனினும், அறக்கட்டளை விரைவில் ஊடகங்களுக்கு முறையான அறிக்கையை வெளியிடும் என்று இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பாலியல் புகார்கள் குறித்து மாணவர்கள் யாரும் இனி பேசவோ, இணையத்தில் பகிரவோ கூடாது என்று கலாச்ஷேத்ரா நிர்வாகம் கட்டளையிட்டுள்ளது. "பத்தாண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் அங்குள்ள மாணவ மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக" கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். ஆனால், ஏதோ நிர்பந்தத்தால் உடனடியாக அந்த பதிவை அவர் நீக்கினார். இதுபோன்ற விஷயங்கள் பாலியல் புகார்கள் மீதான சந்தேகங்களை மேலும் கூடுதலாக்குகிறது.

"சட்டத்தை மீறி பெண்களின் பெயரை வெளிப்படுத்திய முன்னாள் இயக்குனர் சமூக வலைதள பதிவுகளில் உண்மை இல்லை. பெண்கள் அறிக்கைகளை கண்டித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையை முடித்தோம். எதிர்காலத்தில் பணி உறவில் எந்த பெண்ணுக்கும் எதிராக அவதூறு பேசும் நபர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான நடத்தை குறித்து தெரிவிக்கப்படுவார்கள்," என்று கலாச்ஷேத்ரா நிர்வாக குழுவில் உள்ள ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Sylendra Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment