Chennai, chennai metro, metro rail stations, chennai metro feeder services For marina beech
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஜனவரி 17ம தேதி காணும் பொங்கல் அன்று கவர்மென்ட் எஸ்டேட், ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரை வரை மெட்ரோ இணைப்பு சீருந்து ( பீடர் கேப் சர்வீஸ்) சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
Advertisment
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
Advertisment
Advertisements
பொதுவாக, மெட்ரோ இணைப்பு சீருந்து சேவைகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 6 முதல் 8 கி.மீ தொலைவு தூரங்களில் உள்ள பயனர்களுக்கு ரூ.10ல் சேவை வழங்கும்.
காணும் பொங்கலன்று மெரீனா கடற்கரையில் அதிகமான மக்கள் கூட்டம் வருவதால், இந்த மக்களை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய வைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இருந்தாலும், இந்த இணைப்பு சீருந்தில் பயணம் செய்ய இதற்கென்று தனியான ஸ்மார்ட் கார்ட் உள்ளவர்கள் மட்டுமே பயணம் செய்யும். ஓட்டுனரிடம் பணம் கொடுத்தாலும் வாங்க மறுக்கிறார் என்ற பயனர்கள் இது குறித்து கருத்தும் தெரிவித்து வந்தனர். எனவே, இந்த காணும் பொங்கல் சிறப்பு இணைப்பு சீருந்தில் ஸ்மார்ட்கார்டு வாங்க நிரபந்திக்கப்படுகிறார்களா? அல்லது கட்டணம் மட்டும் போதுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னதாக, ஜனவரி 15,16,17ஆம் தேதிகள் பொங்கல் விடுமுறை என்பதால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு 50% கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்து இருந்தது.