சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் எஸ்ஆர்எம் இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் ஆருஷி பி.டெக் படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அவர் தாமதமாக ஹாஸ்டலுக்கு வந்துள்ளார். வார்டன் காரணத்தை கேட்டுள்ளார். தாமதமாக வந்ததனால், பெற்றோரை பேச சொல்லியுள்ளார். சனிக்கிழமை காலை நெடுநேரமாகியும், ஆருஷி அறையின் கதவு திறக்கப்படவில்லை. சக மாணவர்கள் கதவை திறந்து பார்த்தபோது அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக, மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
Advertisment
Advertisements
அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவது, ஆருஷி, காலேஜ் ஹாஸ்டலை விட்டு வெளியில் தங்கி காலேஜ்க்கு சென்று வர விரும்பியுள்ளார். ஆனால், அதற்கு அவளது பெற்றோர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து ஆருஷி முரண்டுபிடித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலைக்கான குறிப்பு எதுவும் அவரது அறையில் கண்டெடுக்கப்படவில்லை. என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
2019-20ம் நிதியாண்டில் மட்டும் இதுவரை இந்த கல்வி நிறுவனத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2 மாதங்களில் 3 தற்கொலை சம்பவங்கள் நடந்தேறிய நிலையில், இதுதொடர்பான சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள டிஜிபி திரிபாதி, கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் ஒருபகுதியாக, 30 அதிகாரிகள் கொண்ட குழு, கல்வி நிறுவன வளாகத்தில் ஆய்வு மேற்கொண்வு 2 டிவிடி ரெக்கார்டர், சில ஆவணங்கள், மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பாக சிலரது வாக்குமூலங்கள் உள்ளிட்டவைகளை பதிவு செய்துகொண்டிருந்தநிலையில், மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடர் தற்கொலைகளுக்கு தீர்வு தான் என்ன என்பதே ஆயிரம் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.