சென்னை – கேரளா இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், கூடுதலாக 6 முறை இயக்கப்படும் என்று ரயில்வேதுறை அறிவித்துள்ளது.
ரயில் எண்: 06035 தாம்பரம் – கொச்சுவேலி: இந்த ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே இயங்கும். 04.07.2024 முதல் 20.07.2024 வரை செயல்படும். 6 முறை செயல்படும். தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம் ஜங்ஷன், விருத்தாச்சலம் ஜங்ஷன், திருச்சி, திண்டுக்கல் ஜங்ஷன், மதுரை ஜங்ஷன், விருதுநகர் ஜங்ஷன், சிவகாசி, ஸ்ரீவல்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடயநல்லூர், தென்காசி ஜங்ஷன், செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனேசுசரேம், கொட்டாரக்கரை, குந்தாரா, கொல்லாம் ஜங்ஷன், கொச்சுவேலி நிறுத்தங்களில் ரயில் நிற்கும்.
ரயில் எண்: 06036 கொச்சுவேலி- தாம்பரம்: இந்த ரயில் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயங்கும். 05.07.2024 முதல் 21.07.2024 வரை செயல்படும். 6 முறை செயல்படும்.கொச்சுவேலி, கொல்லம் ஜங்ஷன், குந்தாரா, கொட்டாரக்கரை, அவனேசுசரேம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, ஜங்ஷன், தென்காசி, கடயநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவல்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஜங்ஷன், மதுரை ஜங்ஷன், திண்டுக்கல் ஜங்ஷன், திருச்சி, விருத்தாச்சலம் ஜங்ஷன், விழுப்புரம் ஜங்ஷன், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட நிறுத்தங்களில் நின்று செல்லும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“