சென்னை வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில், ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் முடிந்த பின், வருகின்ற ஜுன் மாதம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிளம்பாக்கம் பேருந்து முனையத்தில், புறநகருக்கு பயணிக்கும் பேரூந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 226 புறநகர் பேருந்துகள் நிறுத்துவதற்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் புறநகர் பேரூந்துகளுக்காக பிரத்யேகமான பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தனி அலுவலக கட்டிடம், பாதுகாகப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள், கழிவறைகள் போன்ற வசதிகள் உள்ளன.
2 அடித்தளம் என்றும், அடித்தளத்தில் 2,769 இருசக்கர வாகனங்கள், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி அமைக்கப்பட்டுள்ளன.
தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள், அவசர சிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலூட்டும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை, பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், இயற்கை நிலக்காட்சி, குளம், கால்வாய், நடைபாதை, கற்சிற்பங்கள், நீரூற்றுகள் ஆகிவை அமைக்கப்படவுள்ளன.
கிளம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் அரசு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனைக் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil