/indian-express-tamil/media/media_files/OoKCaRRsg1etEx8KKBZT.jpg)
Chennai MTC Bus Track number change
கோயம்பேடு- கூடுவாஞ்சேரி, கோயம்பேடு- கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பேருந்துகளின் தடம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய எண்கள்
கோயம்பேடு- கிளாம்பாக்கம்- 104c cut, கோயம்பேடு- கூடுவாஞ்சேரி- 104c
புதிய எண்கள்
கோயம்பேடு- கிளாம்பாக்கம்- 104c, கோயம்பேடு- கூடுவாஞ்சேரி – 104cx
இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது; ‘மாநகர் போக்குவரத்துக் கழகம் பொது மக்களின் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது.
மேலும், ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒவ்வொரு தடம் எண் வழங்கி பயணிகள் எளிதாக பயணம் செய்ய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104C cut பேருந்து, தடம் எண்.104C என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும்.
அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104C பேருந்து, தடம் எண்.104CX என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.