Advertisment

கோயம்பேடு சந்தை மூடப்பட்டது: திருமழிசையில் காய்கறி மொத்த விற்பனை

koyambedu market: சென்னை கோயம்பேடு சந்தை இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காய்கறிகள் வர்த்தகம், திருமழிசையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திருமழிசை பகுதி வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அரச கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai koyambedu market to be close from tomorrow due to corona virus

Chennai koyambedu market to be close from tomorrow due to corona virus

Koyambedu Market Closed: : சென்னை கோயம்பேடு சந்தை இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காய்கறிகள் வர்த்தகம், திருமழிசையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திருமழிசை பகுதி வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அரச கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரேனா பாதிப்பு தீவிரமடைகிறது. இன்று(மே.4) ஒரே நாளில் சென்னையில் மட்டும 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று மார்க்கெட் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக குறிப்பில், கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை நாளை 05.05.2020 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிப்பது அதிர்ச்சியளிக்கிறது - டிடிவி தினகரன்

பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற (7.5.2020) வியாழக் கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம்.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment