அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிப்பது அதிர்ச்சியளிக்கிறது – டிடிவி தினகரன்

இந்த விவகாரத்தில் திமுக ஏன் அமைதியாக இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Amma Unavagam collects money for food from today TTV Dhinakaran expressed his concern
Amma Unavagam collects money for food from today TTV Dhinakaran expressed his concern

Amma Unavagam : தமிழகத்தில் இரண்டாம் லாக்டவுனின் போது, சென்னையில் இயங்கும் அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவு இலவசமாக  வழங்கப்பட்டது. இன்றில் இருந்து 14 நாட்களுக்கு மூன்றாம் கட்ட லாக்டவுன், சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மா உணவகங்களில் இன்று முதல் மீண்டும், உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வழக்கம் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க : தொழிலாளர்களின் பயணத்திற்கு ஆகும் செலவை காங்கிரஸ் ஏற்கும் – சோனியா காந்தி!

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் டிடிவி தினகரன் தன்னுடைய வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த அரசியலை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, ஊரடங்கு காலம் முடியும் வரையில் அம்மா உணவகங்களில் இலவசமாக பொதுமக்களுக்கு அரசு உணவு வழங்க வேண்டும் என்று அவர் தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக ஏன் அமைதியாக இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க : லாக்டவுனில் எங்கே இருக்கிறார் டிடிவி? வைரலாகும் ”முறுக்கு மீசை தினகரன்” புகைப்படங்கள்!

ஒரு மாதத்திற்கு முன்பு அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் தவிர வேறெந்த நிதி உதவியும் மக்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையில் அம்மா உணவகங்களில் கட்டண வசூல் செய்வது மேலும் அவர்களுக்கு சிரமத்தை தான் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்பு வெளியிட்ட ட்வீட்களில், தமிழக அரசு, வீடுகளுக்கு கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் முதல் 100 யூனிட் மின்சாரத்தை 200 யூனிட்டாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மேலும் படிக்க : பிரபல பாப்-இசை பாடகி மடோனாவுக்கு கொரொனா! ரசிகர்கள் கவலை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amma unavagam started to collect money for food from today ttv dhinakaran expressed his concern

Next Story
குவாரன்டைனில் திமுக எம்பி: சிபாரிசு கடிதம் பெற்றவருக்கு கொரோனா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com