பிரபல பாப்-இசை பாடகி மடோனாவுக்கு கொரொனா! ரசிகர்கள் கவலை

என் காரை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணிக்க போகின்றேன். ஜன்னலை இறக்கிவிட்டு, கொரோனா காற்றை சுவாசிக்க போகின்றேன் என இன்ஸ்டகிராமில் பதிவு!

American Pop Singer Madonna infected with coronavirus :  அமெரிக்காவின் பிரபல பாப்-பாடகியான மடோனாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு செய்து கொண்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் பாதிப்பினை குறைக்கும் வகையில் அவருக்கு ஆண்ட்டிபாடீஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

மேலும் அதில் ”நாளை என் காரை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணிக்க போகின்றேன். ஜன்னலை இறக்கிவிட்டு, கொரோனா காற்றை சுவாசிக்க போகின்றேன்” என்றும் அவர் கூறியுள்ளார். 61 வயதான இந்த பாப் – பாடகிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#staysafe #staysane

A post shared by Madonna (@madonna) on

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் அமெரிக்க மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களை குணப்படுத்த அந்நாட்டு அரசு போதுமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க நோய்த் தடுப்பு மையமானது இந்த ஆண்டிபாடீஸ் சோதனையையும் பலருக்குச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சென்னையில் கொரோனா பரவலின் மையமாக மாறும் கோயம்பேடு காய்கறி சந்தை

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close