சென்னையில் கொரோனா பரவலின் மையமாக மாறும் கோயம்பேடு காய்கறி சந்தை

ராயபுரம் மற்றும் வாஷர்மன்பேட்டை  போன்ற உயர் ஆபத்து மண்டலங்களில் கிருமிநாசினி நடவடிக்கைகளில் பணியாற்றிய மூன்று தீயணைப்பு வீரர்களும்  கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்  .

coronavirus full lockdown in chennai

சென்னை கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய கொரோனா தொற்று மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும், சந்தையோடு தொடர்புடைய நான்கு புது கொரோனா பரவல் மண்டலங்களை சென்னை மாநகராட்சி ஆணையம்  அடையாளம் கண்டுள்ளது.

சந்தை நடவடிக்கைகளில் தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. உதாரணமாக, சென்னை கோயம்பேட்டில்  சில்லறை விற்பனைக்கு தடை செய்யப்பட்டு, மொத்த விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது .

சென்னை மாநகராட்சி ஆணையர், ஜி பிரகாஷ் கூறுகையில், சென்னையில்  பதிவான  65 சதவீத கொரோனா தொற்றுகள் அனைத்தும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய மண்டலங்களில் உள்ள ஆறு வார்டுகளிலிருந்து பதிவாகியுள்ளன என்றார். இந்த குறிப்பிட்ட வார்டுகளில் மக்கள் நுழைவதற்கும்  வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் இதர அத்தியாவிசய பொருட்கள் வீட்டு வாசல்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,”என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணனை தமிழக அரசு நியமித்தது.

தமிழகத்தில் கொரோனா வைரசால், நேற்று மட்டும் மேலும் 203 பேர் பாதிப்பு அடைந்தனர். அதில், 176 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி மண்டலங்களில் ஒன்றான அம்பத்தூரில் கடந்த வெளிக்கிழமை வரை 27 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில், 16 பேருக்கு  கோயம்பேடு சந்தையில் பணிபுரியும் காய்கறி விற்பனையாளரின் மூலம் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது.

39 கொரோனா தொற்று நோயாளிகள் கொண்ட வலசரவக்கம் மண்டலத்தில் , 17 பேரின் கொரோனா தொற்று கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவை. இந்த 17 பேரும் கோயம்பேடு காய்கறி சந்தையில் கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் என பல மட்டத்தில் பணி புரிந்து வருவதாக  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை நகரத்தில் மட்டும் தற்போது 906 ஆக்டிவ் கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதில், 98 சதவீத பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்படவில்லை. எனவே, அதிக மக்கள் தொகை கொண்ட மண்டலங்களில் நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம்  புதிய உத்திகளை வகுத்து வருகிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ராயபுரம் மற்றும் வண்ணாரப்பேட்டை  போன்ற உயர் ஆபத்து மண்டலங்களில் கிருமிநாசினி நடவடிக்கைகளில் பணியாற்றிய மூன்று தீயணைப்பு வீரர்களும்  கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்  .

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  42 பேரும் குணமடைந்த நிலையில், நேற்று 108 ஆம்புலன்ஸ் சேவையில்  பணியாற்றிய 25 வயது நிரம்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னையின் கில்பாக் மருத்துவக் கல்லூரியில், 22 வயது பெண் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தனது விடுதி அறையில் வெள்ளிக்கிழமை  இறந்து கிடந்தார். கொரோனா தொற்று பரிசோதனைக்காக அவரின் மாதிரிகளை சேகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில், போலீசாரும் மருத்துவமனை நிர்வாகமும் மரணத்திற்கான காரணத்தை  இன்னும் வெளியிடவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai new coronavirus cluster traced to chennai koyambedu market

Next Story
ரூ.4.14 கோடிக்கு ஏலம் போன சத்குருவின் ஓவியம்! கொரோனா தடுப்பு பணிகளுக்காக நன்கொடை…Isha founder Sadhguru's painting sold for Rs 4.14 crores
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com