சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீ விபத்து… 3 பேருந்துகள் எரிந்து நாசம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆம்னி பேருந்துகள் எரிந்து நாசமானது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.

By: August 23, 2020, 6:18:52 PM

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆம்னி பேருந்துகள் எரிந்து நாசமானது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்துகள் நிற்பதற்காக தனியாக ஆம்னி பேருந்து நிலையம் உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கே ஆம்னி பேருந்துகள் 5 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேருந்துகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 3 ஆம்னி பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. 2 பேருந்துகள் ஒரு பகுதி எரிந்து சேதம் அடைந்தது. தீப்பிடித்த பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகே இருந்த வீடு சுவர் தீயில் கருகி காணப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் குடியிருப்பு பகுதியில் தீ பரவும் அபாயம் தவிர்க்கப்பட்டது.

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட இந்த தீடீர் தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்று கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai koyambedu ombi bus fire accident 3 buses fully burned

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X