Advertisment

கோயம்பேட்டில் மனிதக் கழிவுகளை மனிதர்களை அள்ளிய அவலம்: போலீசார் வழக்குப் பதிவு

Chennai- மனிதக் கழிவுகளை மனிதர்களே அல்லும் அந்த அவலம், வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

author-image
WebDesk
New Update
Maduravayal drainage 1

Chennai

கோயம்பேட்டில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளிய விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்கெட்டில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இதில் அடைப்பு ஏற்பட்டால் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற இயந்திரம் ஒன்று பயன்படுத்தவது வழக்கம். ஆனால் இந்த இயந்திரம் கடந்த 6 மாதங்களாக பழுது ஏற்பட்டு செயல்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் கீழ்  தற்காலிக துப்புரவு பணியாளர்களாக வேலை செய்யும் அருள்தாஸ், சுப்பு, கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்தனர்.

Maduravayal drainage

மனிதக் கழிவுகளை மனிதர்களே அல்லும் அந்த அவலம், வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரும் கோயம்பேடு நன்றி கமிட்டி முதன்மை செயல் அலுவலருமான இந்துமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, கழிவுநீர் அகற்றும் ஒப்பந்ததாரர் பாஸ்கர், துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு- பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment