/indian-express-tamil/media/media_files/2025/02/01/ChETpKubMbIRacfvJsFG.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.90 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.49 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவின் விலை லிட்டருக்கு ரூ.90.50ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Economic Survey 2025 Live Updates
-
Jan 31, 2025 22:09 IST
அமித்ஷா வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னைக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சைதாப்பேட்டை பகுதியில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்த மக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
-
Jan 31, 2025 21:32 IST
அமித்ஷாவை வரவேற்ற அண்ணாமலை
குடியரசு முன்னாள் துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சென்னை வந்த அமித்ஷாவை, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.
-
Jan 31, 2025 20:18 IST
திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஆதவ் அர்ஜுனா
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை, ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இன்றைய தினம் த.வெ.க-வில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவிற்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Jan 31, 2025 18:33 IST
டெல்லி சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு; ஆம் ஆத்மியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் விலகல்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தரப்படாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர். ரோகித் மெஹ்ராலியா (திரிலொக்புரி), மத லால் (கஸ்தூரிபா நகர்), ராஜேஷ் ரிஷி (ஜனக்புரி) ரானினாமா செய்துள்ளனர். பாலம் தொகுடி எம்.எல்.ஏ பாவ்னா கவுர் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
Jan 31, 2025 18:09 IST
த.வெ.க அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி - விஜய் அறிவிப்பு
த.வெ.க அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி என விஜய் அறிவித்துள்ளார். ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து ஆதவ் அர்ஜுனா செயல்படுவார் என்று த.வெ.க தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
Jan 31, 2025 17:59 IST
த.வெ.க 3ம் கட்ட செயலாளர்கள் நியமனம்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் 3ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்ட்டுள்ளனர். 2026 இலக்குக்காக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன், நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் என விஜய் தெரிவித்துள்ளார்
-
Jan 31, 2025 17:57 IST
தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் ஐகோர்ட்டில் ஆஜர்
உயர்நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அனைத்து மக்களாலும் நீதிமன்றத்திற்கு வரமுடியாது என்பதால், மக்களுக்கு உதவும் வகையில் விரைந்து தீர்வு காண்பது அவசியம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது
-
Jan 31, 2025 17:30 IST
விடாமுயற்சி படத்திற்கு U/A சான்றிதழ்
'விடாமுயற்சி' படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
-
Jan 31, 2025 17:15 IST
2026-ம் ஆண்டு இலக்கை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்; த.வெ.க தலைவர் விஜய்
2026 ஆம் ஆண்டு இலக்கை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்யுங்கள் என த.வெ.க தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்
-
Jan 31, 2025 16:46 IST
பச்சையப்பன் கல்லூரியின் பேராசியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பேராசிரியரின் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
Jan 31, 2025 16:27 IST
அஜித் சாருக்கு முதல் வாழ்த்து விஜய் சாரிடம் இருந்து வந்தது. இருவரும் மிக நல்ல நண்பர்கள். - சுரேஷ் சந்திரா
ரேஸில் வெற்றி பெற்றதும் அஜித் சாருக்கு முதல் வாழ்த்து விஜய் சாரிடம் இருந்து வந்தது. அதே போல 'பத்ம பூஷன்' விருது அஜித் சாருக்கு அறிவிக்கப்பட்டதும். இருவரும் மிக சிறந்த நண்பர்கள் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கியுள்ளார்.
-
Jan 31, 2025 15:59 IST
ஈசிஆர் விவகாரம்: 4 பேர் கைது
ஈசிஆர் விவகாரம் குறித்து பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் பேட்டியளித்துள்ளார். 4 பேர் கைது செய்யப்பட்டு 3 பேரை தேடிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
-
Jan 31, 2025 15:32 IST
முடிவுக்கு வரும் 42 ஆண்டுகால 'உதயம்' திரையரங்கின் பயணம்!
ரசிகர்களின் வரத்து குறைவு மற்றும் பொருளாதார சிக்கல்களில் தவித்து வருவதால், திரையரங்கம் இடிக்கப்படவுள்ளது. இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இயங்கி வந்த சாந்தி, கிருஷ்ணவேணி, ஏ.வி.எம் ராஜேஸ்வரி, பிரார்த்தனா, எஸ்.எஸ்.ஆர் பங்கஜம், அகஸ்தியா உள்ளிட்ட திரையரங்குகளின் வரிசையில் தற்போது உதயமும் இணைந்துள்ளது.
-
Jan 31, 2025 15:31 IST
திமுக ஆட்சியில் 7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு
தமிழ்நாட்டில் இதுவரை ₹7132 கோடி மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
Jan 31, 2025 15:23 IST
ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் தவெகவில் இணைந்தனர்!
ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் நிர்மல் குமார் ஆகியோர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இருவருக்கும் தவெகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
-
Jan 31, 2025 15:20 IST
”பெரியார் குறித்து பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும்"- ஜெயக்குமார்
பெரியார் குறித்து சீமான் பேசுவது மக்களை திசைதிருப்பும் செயல். மறைந்த தலைவரின் புகழை இழிவுபடுத்துவது பயன்பாடற்ற செயல் என்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
-
Jan 31, 2025 15:05 IST
இளையராஜாவுக்கு உரிமையில்லை - டெல்லி உயர்நீதிமன்றம்
'என் இனிய போன் நிலாவே' பாடலை 3 ஆம் தரப்புக்கு இசையமைப்பாளர் இளையராஜா ஒதுக்க முடியாது. பாடலின் பதிப்புரிமை சரிகம இந்தியா லிமிடெட்டிடம் உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா மாரு உருவாக்கம் செய்த பாடலை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.
-
Jan 31, 2025 15:01 IST
அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார்
நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். தேர்தல் பொதுக் கூட்டங்களில் கடுமையான, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏளனமாக பேசுவது மற்றும் மதம், ஜாதி, இனம் என பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் அளித்துள்ளார்.
-
Jan 31, 2025 14:50 IST
நித்தியானந்தா வழக்கு: மேல்முறையீடு மனு தள்ளுபடி
மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்த அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக, நித்தியானந்தாவின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்துள்ளது. நித்தியானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் உள்ளார் என அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
Jan 31, 2025 14:47 IST
ECR-ல் பெண்களை சில இளைஞர்கள் துரத்திய விவகாரம்
"சென்னை ECR-ல் பெண்களை சில இளைஞர்கள் துரத்திய விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை, புகார் அளித்த 10 நிமிடங்களில் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கே சென்று விசாரித்தனர். FIR பதிவு செய்ததிலும் தாமதம் இல்லை" - பள்ளிக்கரணை துணை காவல் ஆணையாளர் கார்திகேயன் செய்தியாளர்கள் சந்தித்தார்.
-
Jan 31, 2025 14:45 IST
"VIP தரிசனத்துக்கு தடை விதிக்க முடியாது"
நாடு முழுவதும் உள்ள கோயில்களில் விஐபி சிறப்பு தரிசன முறைக்கு தடை விதிக்க முடியாது. இது தொடர்பாக வழிகாட்டவோ, தீர்ப்பளிக்கவோ வரம்புகள் இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
Jan 31, 2025 14:43 IST
“குருமூர்த்தியை அடிக்கடி சந்திக்கிறார் சீமான்" - ஜெகதீச பாண்டியன் புகார்
குருமூர்த்தி, கோபால்ஜியை சீமான் அடிக்கடி சந்தித்து போசுகிறார். இருவரின் வழிகாட்டுதலில் பெரியார் குறித்து சீமான் பேசியதாக ஜெகதீச பாண்டியன் புகார் அளித்துள்ளார். தமிழ் தேசிய அரசியல் இந்த மண்ணில் மலரக் கூடாது என சீமான் செயல்படுகிறார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் குற்றச்சாட்டு.
-
Jan 31, 2025 14:10 IST
தவெகவில் 3 துணைப் பொதுச் செயலாளர்கள்?
தமிழக வெற்றிக் கழகத்தில் 3 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொள்கை பரப்புச் செயலாளர், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்புகளுக்கும் நியமனம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jan 31, 2025 14:08 IST
நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகினார்.
-
Jan 31, 2025 13:45 IST
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
-
Jan 31, 2025 13:20 IST
மத்திய பட்ஜெட் 2025
பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
-
Jan 31, 2025 13:14 IST
தவெக அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா!
பனையூரில் உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்குவ் அர்ஜுனா வருகை தந்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்றார்.
-
Jan 31, 2025 12:56 IST
அ.தி.மு.க நிர்மல்குமார் த.வெ.க.வில் இணைவதாக தகவல்
அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக உள்ள நிர்மல்குமார், பனையூர் தவெக அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் இருந்த நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Jan 31, 2025 12:54 IST
'ஜம்மு காஷ்மீரில் நிலைமை மாறிவிட்டது: ஜனாதிபதி திரௌபதி முர்மு
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் நிலைமை வெகுவாக மாறிவிட்டது. வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையே உள்ள அந்நிய உணர்வை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் உழைத்துள்ளது. முதல் அஷ்டலக்ஷ்மி மஹோத்சவ் முழு நாடும் வடகிழக்கு எட்டு மாநிலங்களின் திறனைக் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.
-
Jan 31, 2025 12:53 IST
'எல்லைகளைப் பாதுகாப்பதற்கான வரலாற்று நடவடிக்கைகள்: ஜனாதிபதி முர்மு கூறுகிறார்
நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கவும், உள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எனது அரசாங்கம் வரலாற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது. "இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக கடுமையாக குறைந்துள்ளது என்று கூறியள்ளார்.
-
Jan 31, 2025 12:52 IST
'பசுமையான எதிர்காலம், பசுமை வேலைகளை நோக்கி உழைக்கிறேன்: ஜனாதிபதி முர்மு
தற்போதைய மற்றும் வரும் தலைமுறையை கருத்தில் கொண்டு எனது அரசு முடிவுகளை எடுத்து வருகிறது. பசுமையான எதிர்காலம் மற்றும் பசுமை வேலைகளை நோக்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறோம். கடந்த ஆறு மாதங்களில் 500 ஜிகாவாட் இலக்கை அடைய பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2030க்குள் புதைபடிவமற்ற எரிபொருள் ஆற்றல் திறன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்
-
Jan 31, 2025 12:51 IST
பாராளுமன்றத்திலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி திரௌபதி முர்மு
2025 பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடங்குவதற்கான தனது தொடக்க உரைக்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராளுமன்றத்திலிருந்து புறப்பட்டு தனது அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவன் நோக்கிச் செல்கிறார்.
-
Jan 31, 2025 11:57 IST
விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக முன்னேறி வருகிறது: ஜனாதிபதி முர்மு
"உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் நிறைவடைந்துள்ளது. இப்போது நாடு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் இணைக்கப்படும்" மேலும், "நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக முன்னேறி வருகிறது, விமான நிறுவனங்கள் 1700 புதிய விமானங்களை ஆர்டர் செய்துள்ளன என்று ஜனாதிபதி முர்மு கூறியுள்ளார்..
" -
Jan 31, 2025 11:55 IST
புற்றுநோய்க்கான மருந்துகளுக்கான சுங்க வரி தள்ளுபடி: ஜனாதிபதி
அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் 'ஆரோக்யோ மந்திர் நிறுவப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையைப் பார்த்து, பல புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
-
Jan 31, 2025 11:51 IST
ஆளுனரின் போக்கு ஆட்சிக்கு சிறப்பை சேர்க்கிறது: மு.க.ஸ்டாலின்
ஆளுனர் எல்லா பிரச்னைகளுக்கும் அரசுக்கு எதிராக செயல்படுவது, எங்களுக்கு நல்லதாகவே உள்ளது. அவர் இதைதொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரின் இப்போக்கு ஆட்சிக்கு சிறப்பை சேர்க்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் சென்னையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. ஓராண்டு காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது. பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் மரியாதை கொடுக்க தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.
-
Jan 31, 2025 11:22 IST
ஜனாதிபதி முர்மு இரங்கல்
ஜனாதிபதி திரௌபதி முர்மு, பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றும் போது, மகாகும்ப விழாவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தினார். டிசம்பரில் மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
-
Jan 31, 2025 11:21 IST
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பாராட்டிய ஜனாதிபதி முர்மு
ஜனாதிபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 6 கோடி மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
-
Jan 31, 2025 11:16 IST
'லட்சக்கணக்கானோர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்' - ஜனாதிபதி முர்மு
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, அரசின் திட்டங்களின் உதவியுடன் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.
#WATCH | President Droupadi Murmu arrives in Parliament to address the joint sitting of both Houses which marks the beginning of the Budget session
— ANI (@ANI) January 31, 2025
Video source: DD News pic.twitter.com/h0UDNjkQzx -
Jan 31, 2025 10:59 IST
'பல வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாக்கள் விவாதிக்கப்படும்': மோடி பேச்சு
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேசுகையில், “மூன்றாவது ஆட்சியில் நாங்கள்; இந்தியாவின் அனைத்து துறை வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். நாங்கள் பணி முறையில் முன்னேறி வருகிறோம்...புதுமை, சேர்த்தல் மற்றும் முதலீடு ஆகியவை நமது பொருளாதார நடவடிக்கையின் அடிப்படையாக அமைகிறது.
இந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், வரலாற்று சிறப்புமிக்க பல மசோதாக்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்படும். உரிய விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இவை சட்டங்களாக உருவாக்கப்படும். குறிப்பாக நாரி சக்தி மற்றும் பெண்கள் அதிகாரம் மையமாக இருக்கும். சீர்திருத்தம், செயல்படுத்துதல் மற்றும் மாற்றுதல் ஆகியவை எங்களின் இரண்டாவது மையமாக இருக்கும்” என்று அவர் குர்னார்.
-
Jan 31, 2025 10:51 IST
செல்ஃபிக்கு போஸ் கொடுத்த ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கன்னிகாபுரம் பகுதியில் தன்னை வரவேற்பதற்காக காத்திருந்த மாணவர்களுக்கு பாக்ஸிங் கிளவுஸில் ஆட்டோகிராஃப் போட்டும், செல்ஃபிக்கு போஸ் கொடுத்தும் மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ. 44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
-
Jan 31, 2025 10:44 IST
‘புதுமை, சேர்த்தல், முதலீடு’ – பட்ஜெட் கூட்டத் தொடரை பாராட்டிய மோடி
இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, “ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆசிகளைப் பொழிய லட்சுமி தேவியை பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார். மேலும், “இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய நம்பிக்கையையும் ஆற்றலையும் நமது இலக்கான ‘விக்சித் பாரத்’ அடையும் என்று நான் நம்பிக்கையுடன் கூற முடியும்” என்றார்.
“நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக இந்த பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளனர், இது எனது மூன்றாவது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட். 2047ல், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்த பட்ஜெட் புதிய நம்பிக்கையையும், புதிய ஆற்றலையும் வழங்கும் என்று முழு நம்பிக்கையுடன் இதை என்னால் கூற முடியும். 140 கோடி இந்தியர்கள் தங்கள் கூட்டு முயற்சியால் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள்." என்று பிரதமர் மோடி கூறினார்.
-
Jan 31, 2025 10:37 IST
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.960 உயர்ந்து சவரன் ரூ.61840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7730-க்கும் சவரன் ரூ.61840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
-
Jan 31, 2025 10:18 IST
சென்னை குத்துச்சண்டை வீரர் கொலை - 9 பேர் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் தனுஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை காவல்துறை கைது செய்தது. வீட்டின் அருகே வசிக்கும் இளைஞர்களுடன் ஏற்பட்ட முன்பகை காரணமாக தனுஷ் கொலை செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Jan 31, 2025 09:45 IST
சென்னையில் பிரபல தொழிலதிபரின் மகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
சென்னை அபிராமபுரத்தில் பிரபல தொழிலதிபரின் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சோதனை நடத்தி வருகின்றனர். 7 பேர் கொண்ட அதிகாரிகள் அதிகாலையில் இருந்து சோதனை செய்து வருகின்றனர்
-
Jan 31, 2025 09:35 IST
பட்ஜெட் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்
பொருளாதார வளர்ச்சி குறைதல், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் நுகர்வு தேவையை மிதப்படுத்துதல் உள்ளிட்ட பல சவால்களை பட்ஜெட் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பொருளாதார வளர்ச்சி 2025 நிதியாண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத 6.4 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2019 இல் உலகைத் தாக்கிய கொரோனா தொற்று பரவலிருந்து இது மிகக் குறைந்த வளர்ச்சியாகும்.
-
Jan 31, 2025 09:35 IST
ருதுராஜுக்கு பிறந்தநாள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சி.எஸ்.கே சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
A leader forged in fire! 🔥
— Chennai Super Kings (@ChennaiIPL) January 30, 2025
A warrior built with resilience! 💪
Our Captain, Our Hero! 👑
Happy Birthday, Ruturaj Gaikwad! 🦁💛 #UngalRutu #WhistlePodu @Ruutu1331 pic.twitter.com/Hc0UmhvnlrYoungstar from Maharashtra ➡️ Superstar of Chennai 💥🦁#UngalRutu #WhistlePodu @Ruutu1331 pic.twitter.com/8WagK1gVwT
— Chennai Super Kings (@ChennaiIPL) January 31, 2025 -
Jan 31, 2025 09:28 IST
அண்ணா நினைவு நாள் - தி.மு.க அமைதிப் பேரணி
வருகிற பிப்ரவரி 3 ஆ ம் தேதி பேரறிஞர் அண்ணா 56-வது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.
-
Jan 31, 2025 09:24 IST
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பாராட்டு
சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை கையாள்வதில் மெட்டா நிறுவனத்தை விட, எலான் மஸ்கின் எக்ஸ் தளம் சிறப்பாக செயல்படுகிறது என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
Jan 31, 2025 09:05 IST
காலை உணவு திட்டம்: தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பு ரத்து; மேயர் பிரியா
1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழக அரசால் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்த திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்குவதற்கான ஒப்பந்த கோரும் அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே அந்த ஒப்பந்த அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்வதாகவும், மாநகராட்சியே இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
-
Jan 31, 2025 08:51 IST
சென்னை முட்டுக்காட்டில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவம் - 6 பேர் கைது
சென்னை முட்டுக்காட்டில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில், விசாரணையில் இருந்த மேலும் 4 பேரை கானத்தூர் காவல்துறை கைது செய்துள்ளனர். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேரை காவல்துறை தேடி வருகிறது.
காரில் கொடி பொருத்திய நபர் தி.மு.க பிரமுகர் இல்லை என்றும், மோசடி வழக்குகளில் தொடர்புடைய சந்துரு காரில் தி.மு.க கொடியுடன் வலம் வந்துள்ளார் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.