Advertisment

Chennai News Highlights: தமிழகத்தில் இருவருக்கு எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
HMPV

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

சட்டசபை: தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

  • Jan 06, 2025 22:01 IST

    கனடா பிரதமர் ராஜினாமா அறிவிப்பு 

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ட்ரூடோ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, புதிய ஜனநாயக கட்சி விலக்கிய பின், நெருக்கடி காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.



  • Jan 06, 2025 21:45 IST

    "எச்.எம்.பி.வி புதிய வைரஸ் அல்ல": ஜே.பி. நட்டா

    எச்.எம்.பி.வி புதிய வைரஸ் அல்ல என்றும், குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் தொடக்கத்தில் அதிகமாக பரவுகிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisement
  • Jan 06, 2025 21:09 IST

    வேலை வாய்ப்புகள் - தமிழ்நாடு முதலிடம்

    தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குதல் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது என அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 06, 2025 20:56 IST

    ‘காதலிக்க நேரமில்லை’ ட்ரெய்லர், நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்- படக்குழு

    கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ட்ரெய்லர், நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது



  • Jan 06, 2025 20:15 IST

    ஸ்டாலினுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி

    "உங்கள் சொற்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி தெரிவித்துள்ளார்



  • Jan 06, 2025 19:52 IST

    ஹெச்.எம்.பி.வி குறித்து பயப்பட ஒன்றுமில்லை - விஞ்ஞானி சௌமியா

    ஹெச்.எம்.பி.வி குறித்து பயப்பட ஒன்றுமில்லை. இது சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. சளி ஏற்படும்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா தெரிவித்துள்ளார்



  • Jan 06, 2025 19:49 IST

    மலையாள சினிமாவில் நிறைய ஸ்கோப் இருக்கு - நடிகை த்ரிஷா

    என்னுடைய சினிமா கேரியரில் மலையாள சினிமா மீது எனக்கு மிக மிக மரியாதை உண்டு. அங்கே அறிவுபூர்வமான - வித்தியாசமான கதைகளாக இருக்கும். நமக்கும் நிறைய ஸ்கோப் கிடைக்கும். அதனால் வருடத்துக்கு ஒரு மலையாளப் படம் பண்ணனும் என முடிவு செய்தேன் என `ஐடெண்டிட்டி' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா பேசியுள்ளார்



  • Jan 06, 2025 19:21 IST

    மாவட்ட தலைவர் பதவிக்கு விண்ணப்பம்; காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு

    காங்கிரஸ் மாவட்ட தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறிவிப்புக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்



  • Jan 06, 2025 18:24 IST

    ராஜேந்திர பாலாஜி வழக்கு; சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

    வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 



  • Jan 06, 2025 18:23 IST

    தமிழகத்தில் ஹெச்.எம்.பி.வி பாதிப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் - பொது சுகாதாரத்துறை

    தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த ஹெச்.எம்.பி.வி பாதிப்புகள் இல்லை, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஹெச்.எம்.பி.வி வைரஸ் காய்ச்சல் நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான். சீனாவில் இருப்பது போல் உருமாற்றம் அடைந்த ஹெச்.எம்.பி.வி வைரஸ் எதுவும் தமிழகத்தில் இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது



  • Jan 06, 2025 17:49 IST

    தமிழகத்தில் அவசரகாலத்தை நினைவூட்டுகிறது: ஆளுநர் மாளிகை

    தமிழகத்தில் சட்டமன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.



  • Jan 06, 2025 17:44 IST

    பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் மரணம்

    கேரளா மாநிலம் இடுக்கி அருகே 20 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்தனர். 20-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவேலிகரையில் இருந்து தஞ்சைக்கு சுற்றலா சென்றுவிட்டு திரும்பியபோது, பிரேக் பிடிக்காமல் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Jan 06, 2025 17:41 IST

    சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று

    கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிந்து செல்லுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும ஒரே நாளில் 5 பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.



  • Jan 06, 2025 17:39 IST

    2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று: கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடு

    கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிந்து செல்லுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.



  • Jan 06, 2025 16:52 IST

    ஆளுநர் ஆர்.என். ரவி பதவியிலிருந்து வெளியேற வேண்டும் - சி.பி.எம் மாநிலச் செயலாளர் சண்முகம்

    சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகவும் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்துகொண்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.



  • Jan 06, 2025 16:25 IST

    இந்தியாவில் 3வது HMPV பாதிப்பு

    அகமதாபாத்தில் 2 மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவில் 2 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



  • Jan 06, 2025 16:15 IST

    சத்தீஸ்கரில் 9 ராணுவ வீரர்கள் வீர மரணம்

    சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படை வாகனத்தைக் குறிவைத்து நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியதில் 9 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் வீரர்கள் பயணித்த வாகனம் வெடித்துச் சிதறியது.



  • Jan 06, 2025 15:51 IST

    சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வதை நிறுத்துவதை ஏற்க முடியாது - விஜய்  

    த.வெ.க தலைவர் விஜய்: “சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாக தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 06, 2025 15:26 IST

    ஆளுநரை கண்டித்து தி.மு.க ஜன.7-ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாட்டையும் தமித்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ரவியைக் கண்டித்து நாளை (ஜனவரி 7) தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க - பா.ஜ.க கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் காலை 10 மணி அளவில் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்று தி.மு.க அறிவித்துள்ளது.



  • Jan 06, 2025 15:09 IST

     "ஆளுநர் சட்டமன்ற மரபை காக்க வேண்டும்" - த.வெ.க தலைவர் விஜய் 

    "தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது சட்டமன்றத்தின் மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்க வேண்டும்" என்று த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 



  • Jan 06, 2025 15:06 IST

    ஆளுநர் வெளியேறியது ஏன்? - மீண்டும் விளக்கம்

    "ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் ஆளுநர் உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். தேசிய கீதம் பாட முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோரிடம் ஆளுநர் வலியுறுத்தியும் பாடப்படவில்லை. தேசிய கீதத்தை அவமதித்ததாலேயே, சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்" என்று  ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. 



  • Jan 06, 2025 14:58 IST

    ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் கைது வாரண்ட் 

    வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 2-வது முறையாக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அங்கிருந்து தப்பிய ஷேக் ஹசீனா கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.



  • Jan 06, 2025 14:47 IST

    ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ்

    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஆவணங்களை கேட்டு பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 



  • Jan 06, 2025 14:46 IST

    விண்வெளியில் துளிர்விட்ட விதைகள்  - இஸ்ரோ தகவல்

    பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்டுடன் விண்வெளிக்கு  எடுத்துச் செல்லப்பட்ட விதைகளில், இலைகள் துளிர்விட்டிருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.  



  • Jan 06, 2025 14:44 IST

    ஸ்பேடெக்ஸ் மிஷன் - சோதனைத் திட்டம் ஒத்திவைப்பு

    இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் மிஷன் டாக்கிங் சோதனைத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வரும் 9 ஆம் தேதி ஸ்பேடெக்ஸ் மிஷன் டாக்கிங் சோதனைத் திட்டம் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

     



  • Jan 06, 2025 14:31 IST

    ஞானசேகரன் வீட்டை அளவெடுத்த அதிகாரிகள்

    அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரன் வீட்டை டேப்புடன் வந்து அளவெடுத்து சென்றுள்ளனர் வருவாய்த்துறை அதிகாரிகள். 

    வீடு அமைந்துள்ள இடம் பட்டா இடம் தானா? அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 



  • Jan 06, 2025 14:16 IST

    அருந்ததியர் கூட்டமைப்பு பேரணி 

    தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பாக சென்னை எழும்பூரில் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. உள் இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர். 



  • Jan 06, 2025 14:10 IST

    ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது - ஸ்டாலின் காட்டம் 

    "அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என் ரவி. கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. 

    தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

    தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா." என்று முதல்வர்  ஸ்டாலின்  தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.  



  • Jan 06, 2025 13:48 IST

    அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் பரபரப்பு பேச்சு

     

     

    2021 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணத்தை, கட்சியினரே சுருட்டியதால் திருவொற்றியூர் தொகுதியில் தோற்றுப்போனதாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் பேசியுள்ளார். "இந்த முறை அப்படி நடக்காது ராஜா, கனவு காணாதே.. பணம் கொடுக்க மாட்டேன்..” என்று அவர் அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ளார்

     



  • Jan 06, 2025 13:32 IST

    'அ.தி.மு.க அரசியல் ஆதாயம் தேடுவது அதிர்ச்சி அளிக்கிறது' - திருமா பேச்சு 

    'அண்ணா பல்கலை விவகாரத்தில் அ.தி.மு.க அரசியல் ஆதாயம் தேடுவது அதிர்ச்சி அளிக்கிறது' என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

     



  • Jan 06, 2025 13:30 IST

    தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர்  திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

    'இந்தியன் 3' படத்தை முடிக்க ஷங்கர் மேலும் ரூ. 65 கோடி பட்ஜெட் கேட்பதாகவும், 'இந்தியன் 2ல் கடும் நஷ்டம் ஏற்பட்டதால், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது' என லைகா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர்  திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



  • Jan 06, 2025 13:02 IST

    பொங்கலுக்கு 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கு இடையேயும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 



  • Jan 06, 2025 12:33 IST

    தமிழ்நாட்டின் மரபுகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் - அன்புமணி

    தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். விவாதிக்க ஏராளமான விவகாரங்கள் இருக்கும் சூழலில் கவனத்தை திசை திருப்பும் செயலை ஏற்க முடியாது என  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 



  • Jan 06, 2025 12:31 IST

    கர்நாடகாவில் 2 பேருக்கு HMPV வைரஸ்

    கர்நாடகாவில் 3 மாத பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ்
    பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 



  • Jan 06, 2025 12:16 IST

    ஜன.11 வரை சட்டப் பேரவை கூட்டத்தொடர்

    சட்டப்பேரவையில் நாளை காலை ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது. 

    வரும் 11ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Jan 06, 2025 12:14 IST

    சீமானின் பேச்சுக்கு பபாசி கடும் கண்டனம்

    "சீமான் மேடை ஏறுவதற்கு முன்பே, இது அரசியல் மேடை அல்ல, இலக்கிய மேடை, புத்தகங்கள் தொடர்பாக மட்டும் பேசுமாறு அறிவுறுத்தினேன். 

    சீமானின் பேச்சுக்கு பபாசி கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. நீங்கள் அழைத்துவரும் நபர் அரசியல் பேசக் கூடாது என பதிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தன்னையும், பதிப்பகத்தையும் முன்னிலைப்படுத்துவதற்கு புத்தகக் காட்சியை அந்த பதிப்பகம் பயன்படுத்தியுள்ளது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் விளக்கத்தைக் கேட்டு, அந்த பதிப்பகம் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்

    வரும் காலங்களில் புத்தக வெளியீடுகளின் கட்டுப்பாடுகளை வரையறை செய்வோம். சீமானுக்கு கொள்கைகள் இருக்கும் ஆனால், இது பொதுவான மேடை, இங்கு பேசியதுதான் சிக்கல் என பபாசி தலைவர் சொக்கலிங்கம் கூறினார். 



  • Jan 06, 2025 11:27 IST

    ஆளுநர் உரை இல்லை; சபாநாயகர் உரை- இ.பி.எஸ் விமர்சனம் 

    ஆளுநர் உரை இல்லை; சபாநாயகர் உரை; அதுவும் காற்றடைத்த பலூன் -  இ.பி.எஸ் விமர்சனம் 

    ஆளுநர் உரை மாற்றப்பட்டு சபாநாயகர் உரையாக காட்சியளிக்கிறது. அதுவும் காற்றடைத்த பலூன் போல் உள்ளது எதுவும் இல்லை. ஆளுநர் புறக்கணித்து விட்டுச் செல்ல வில்லை. திட்டமிட்டே ஆளுநர் உரையாற்ற கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள்  என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். 



  • Jan 06, 2025 11:24 IST

    ஆளுநர், மன்னிப்பு கேட்க வேண்டும்- சிவசங்கர்

    சட்டப் பேரவையை அவமதித்த ஆளுநர், மன்னிப்பு கேட்க வேண்டும், தேசப்பற்று குறித்து எங்கள் தலைவர்களுக்கு பாடம் எடுக்கும் தகுதி ஆளுநருக்கு இல்லை. 

    கடந்த ஆண்டு தேசிய கீதம் பாடும் வரை இருக்காமல் அவையில் இருந்து வெளியேறி, தேசிய கீதத்தை அவமதித்தது ஆளுநர்தான். ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. பதவிக்காலம் முடிந்தும் அதில் ஒட்டிக்கொண்டு இருப்பது அவருக்கு அழகில்லை என அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். 



  • Jan 06, 2025 11:22 IST

    தமிழ்நாட்டு மக்களவைவிட, ஆளுநர் பெரிய ஆள் இல்லை - அமைச்சர் சிவசங்கர்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் மரபின் அடிப்படையில் என்ன நிகழ்வு நடக்க வேண்டுமோ, அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று ஆளுநர் ரவி நினைக்கிறார். அது முடியாது.

    59 பக்கத்தில் அரசின் சாதனைகளை, திட்டங்களை உரையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை படிக்க வேண்டும் என்பதால் உரையை வாசிக்காமல் வெளியேறியுள்ளார்.

    தேச பக்தியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்ததுபோல, தேசிய கீதம் பிரச்னையை மீண்டும் எழுப்பியுள்ளார். தேச பக்தியில் தமிழ்நாட்டு மக்களவைவிட, ஆளுநர் பெரிய ஆள் இல்லை என அமைச்சர் சிவசங்கர் கூறினார்,

     



  • Jan 06, 2025 10:51 IST

    இந்தியாவில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி

    பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு இந்தியாவில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • Jan 06, 2025 10:47 IST

    தேசிய கீதத்துடன் அவை நிறைவு

    ஆளுநர் உரையை சபாநாகர் ஆற்றிய நிலையில் அவை முன்னவர் ஆளுநர் வெளிநடப்புக்கு விளக்கம் அளித்த பின் தேசிய கீதம் பாடப்பட்டு இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் முடிவடைந்தது.தீர்மானம் நிறைவேறிய பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. அலுவல் ஆய்வுக்குழு இன்று மாலை கூடி, எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.



  • Jan 06, 2025 10:39 IST

    அவை முன்னவர் துரைமுருகன் பேச்சு

    ஆண்டின் முதல் உரையை வாசிக்காமல் ஆளுநர் புறப்பட்டுச் சென்ற நிலையில் அவை முன்னவர் துரைமுருகன் விளக்கம் அளிக்கிறார்.



  • Jan 06, 2025 10:04 IST

    ஆளுநர் உரையை வாசிக்கும் சபாநாயகர் அப்பாவு

    சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய சில நேரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க தொடங்கினார். தமிழக அரசின் திட்டங்கள் குறித்து வாசிக்க தொடங்கினார்.



  • Jan 06, 2025 09:50 IST

    சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ரவி

    தேசிய கீதம் பாட அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி சட்டப்பேரவையில் இருந்து  ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறிதாக ஆளுநர்  மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.



  • Jan 06, 2025 09:45 IST

    அதிமுகவினர் வெளியேற்றம்

    யார் அந்த சார்? என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் ஆளுநர் வெளியேற்றத்திற்கு  பிறகு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.



  • Jan 06, 2025 09:42 IST

    உரையை வாசிக்காமல் புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.  ரவி 

    சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ரவி, உரையை வாசிக்காமல் வெளியேறினார்.  கடந்த ஆண்டு ஒரு வரிசை மட்டும் வாசித்த நிலையில் இந்த ஆண்டு உரையை வாசிக்காமல் வெளியேறினார்.



  • Jan 06, 2025 09:39 IST

    யார் அந்த சார் பேட்ஜ் அணிந்து வருகை

    இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு யார் அந்த சார் ? என்ற பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவிக்கு அதிமுகவினர் வருகை தந்துள்ளனர். 



  • Jan 06, 2025 09:10 IST

    சட்டப்பேரவை கூட்டத்தொடர்

    நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏக்கள் வருகை தந்து கொண்டு இருக்கின்றனர்.



  • Jan 06, 2025 09:06 IST

    "பாஜக தலைவர்களுக்கு வெட்கமே இல்லை"

    பாஜக தலைவர்களுக்கு வெட்கமே இல்லை. பிரியங்கா காந்தியை தொடர்ந்து டெல்லி பெண் முதலமைச்சர் அதிஷி குறித்தும் பாஜக வேட்பாளர் ரமேஷ் புதுரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். வெட்கமே இல்லாமல் பாஜக தலைவர்கள் எல்லை மீறி போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Jan 06, 2025 08:34 IST

    சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய பிரசாந்த் கிஷோர் கைது!

    பீகார் மாநிலம் பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய ஜன் சுராஜ் கட்சித் தலைவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரஷாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டார்.அரசு பணியாளர் முறைக்கேடு நடந்ததாக கூறி பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.



news updates Live News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment