/indian-express-tamil/media/media_files/2025/10/18/traffic-2025-10-18-07-10-26.jpg)
Today Latest News Updates - பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Oct 18, 2025 07:08 IST
சொந்த ஊர் செல்லும் மக்கள் - விக்கிரவாண்டியில் பல கிலோ மீட்டருக்கு ஸ்தம்பித்த போக்குவரத்து
தீபாவளி பண்டிகையையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களால் விழுப்புரம், விக்கிரவாண்டி சுங்க சாவடியில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் நள்ளிரவு வரை 42,100 வாகனங்கள் கடந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Oct 17, 2025 21:58 IST
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை - தமிழக அரசு ஆணை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு, தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் 21.10.2025 செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- Oct 17, 2025 21:44 IST
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி: “தீபாவளியையொட்டி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது; தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.” என்று கூறினார்.
- Oct 17, 2025 21:41 IST
புதுக்கோட்டை அன்னவாசலில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. முலகுளம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து முறையாக அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
- Oct 17, 2025 20:44 IST
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆய்வு
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருக்கும் பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர். இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆய்வு செய்தார்.
- Oct 17, 2025 20:41 IST
சிக்னல் கோளாறு: செங்கல்பட்டில் ரயில்கள் 1 மணி நேரத்திற்கு மேல் தாமதம்
ஒட்டிவாக்கம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் கால தாமதமானது. விழுப்புரம் பாசஞ்சர், பாண்டிச்சேரி விரைவு ரயில், செங்கோட்டை விரைவு ரயில், சேது விரைவு ரயில் உள்ளிட்டவை நீண்ட நேரம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
- Oct 17, 2025 20:39 IST
கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: 1.28 லட்சம் பயணிகள் பயணம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இரண்டாவது நாளாக இன்று (அக்டோபர் 17, 2025) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் நெரிசலைச் சமாளிக்கும் விதமாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கிளாம்பாக்கம் நோக்கி பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இரண்டாவது நாளான இன்று மாலை வரையிலான நிலவரப்படி, இதுவரை இயக்கப்பட்ட மொத்தம் 2,853 சிறப்புப் பேருந்துகளில் சுமார் 1.28 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிப்போர் கிளாம்பாக்கம் முனையம் வழியாகச் சிரமமின்றிப் பயணிக்க இந்தச் சிறப்புப் பேருந்து ஏற்பாடுகள் வழிவகுத்துள்ளன.
- Oct 17, 2025 19:48 IST
இடி தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோடு இடி தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- Oct 17, 2025 19:21 IST
‘நெல்லையில் எனது பெயரில் நற்பணி மன்றம்... எனக்கு உடன்பாடு இல்லை’ - அண்ணாமலை
தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை: “திருநெல்வேலியில் எனது பெயரில் நர்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதை அறிந்தேன்; நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடுஇல்லை. தயவுசெய்து, என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறென்” என்று தெரிவித்துள்ளார்.
- Oct 17, 2025 19:14 IST
திண்டுக்கலில் மின்னல் தாக்கி 2 மாணவர்கள் படுகாயம்
திண்டுக்கல், குஜிலியம்பாறையில் பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்தபோது மின்னல் தாக்கி 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த மாணவர்கள் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Oct 17, 2025 18:59 IST
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே போக்குவரத்து நெரிசல்
தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்ல ஊருக்கு புறப்படும் மக்களால் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
- Oct 17, 2025 18:57 IST
திண்டுக்கல்லில் மின்னல் தாக்கி 2 மாணவர்கள் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்தபோது மின்னல் தாக்கி 2 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த மாணவர்கள் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
- Oct 17, 2025 18:44 IST
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் – ஐக்கோர்ட் முக்கிய உத்தரவு
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் திட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் நீட்டிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- Oct 17, 2025 18:40 IST
எதன் அடிப்படையில் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு? ஐகோர்ட் கேள்வி
சென்னை உயர் நீதிமன்றம் அருகே வி.சி.க நிர்வாகிகளால் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட விவகாரத்தில், எதன் அடிப்படையில் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
- Oct 17, 2025 18:37 IST
பா.ஜ.க வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
பா.ஜ.க மாநிலச் செயலாளரும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணொலி வாயிலாக நடந்த விசாரணையில் வழக்கறிஞர் அங்கி அணியாமல் ஆஜரானதால் நீதிபதி கண்டித்தார். அதற்கு தோள்பட்டை வலி காரணமாக மேலங்கி அணியவில்லை என்று அஸ்வத்தாமன் கூறியதை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 22 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது
- Oct 17, 2025 18:02 IST
ககன்யான் திட்டத்திற்கான இறுதி கட்டப் பணியில் உள்ளோம்- இஸ்ரோ தலைவர்
விண்வெளிக்கு ஆட்களை சுமந்து செல்லும் ககன்யான் ராக்கெட்டுக்காக 80,000-க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்து வெற்றி கண்டு உள்ளோம். இந்தத் திட்டத்திற்கான இறுதி கட்டப் பணியில் உள்ளோம் என திருநெல்வேலியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி அளித்துள்ளார்
- Oct 17, 2025 17:46 IST
கரூர் சம்பவம் – த.வெ.க மாவட்ட செயலாளருக்கு ஜாமின்
கரூர் கூட்ட நெரிசலின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் த.வெ.க சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது
- Oct 17, 2025 17:45 IST
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- Oct 17, 2025 17:21 IST
இடி தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் - ஸ்டாலின் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இடி தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
- Oct 17, 2025 17:18 IST
பிளாஸ்டிக்கிற்கு பதில்..? ஐகோர்ட் முக்கிய உத்தரவு
ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்த வழக்கில், பிளாஸ்டிக்கிற்கு பதில் வேறு பொருட்களை பயன்படுத்த முடியுமா? என நவம்பர் 14ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- Oct 17, 2025 16:51 IST
ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்த நவாஸ் கனி
ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயில், பரமக்குடி வந்தபோது ரயிலை வரவேற்று இஞ்சின் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி. ரயிலில் திருவனந்தபுரம் - ராமேஸ்வரம் - தாம்பரம் என்பதற்கு பதில் பிழையுடன் வைக்கப்பட்டுள்ள பலகையை சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை. ராமேஸ்வரம் சென்றடைந்து இதே ரயில் தாம்பரத்திற்கு இயக்கப்படும்.
- Oct 17, 2025 16:19 IST
கோவையிலிருந்து விமானங்களில் சரக்கு ஏற்றுமதி அதிகரிப்பு
தீபாவளி பண்டிகை 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் இருந்து விமானத்தில் சரக்குகள் ஏற்றுமதிக்கான 'புக்கிங்' அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோவை விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, உள்நாட்டு பிரிவில் வழக்கமாக மாதந்தோறும் 500 டன்னுக்கு கீழ் சரக்குகள் கையாளப்படும். ஆனால் கடந்த மாதம் 547 டன்னாக அதிகரித்தது. அதுவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது சரக்கு புக்கிங் அதிகரித்துள்ளதால் இந்த மாதம் 625 டன்களுக்கு மேல் சரக்குகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.
- Oct 17, 2025 16:17 IST
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- Oct 17, 2025 15:46 IST
ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி: சிவசங்கர்
அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார் என அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். மக்களிடம் சென்று எடப்பாடி பழனிசாமி கேட்கட்டும்; நலத்திட்டங்கள் பற்றி மக்கள் சொல்வார்கள். தமிழ்நாடு அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றனர். விடியல் பயணத் திட்டத்தை அண்டை மாநிலங்களும் அமல்படுத்தி வருகின்றன. காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்த போவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.
- Oct 17, 2025 15:44 IST
தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
4 நாட்கள் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். 4 நாட்கள் நடந்த சட்டப்பேரவையில் கரூர் சம்பவம், இருமல் மருந்து, ஆணவக் கொலை பற்றி விவாதிக்கப்பட்டன. ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் கூறியுள்ளார்.
- Oct 17, 2025 15:08 IST
தீபாவளி பண்டிகை: சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் தியாகராயர் நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டிபஜார், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டை, பூக்கடை, புரசைவாக்கம், தியாகராயர் நகரில் தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- Oct 17, 2025 15:08 IST
ஆணவ கொலை தடுக்க தனி சட்டம்-இந்திய கம்யூ. கட்சி வரவேற்பு
சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர கொள்கை முடிவு எடுத்து, சாதி ஆணவக் கொலைகளை உறுதியாக தடுக்கும் வகையில், பொருத்தமான பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்திருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.
- Oct 17, 2025 15:06 IST
தீபாவளி பண்டிகை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லும் வகையில் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நாளை (சனிக்கிழமை)மதியம் 2 மணி முதல் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை மற்றும் ஆவடி பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பூந்தமல்லியில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- Oct 17, 2025 14:45 IST
இனி 24 மணிநேரத்தில் தபால் சேவை; மத்திய அமைச்சர் தகவல்
நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலம் தபால் சேவை 24 மணிநேரத்திலும், பார்சல் சேவை 48 மணிநேரத்திலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வர உள்ளது. 2029ம் ஆண்டுக்கள் அஞ்சல் துறையை செலவுகள் நிறைந்த துறையாக இல்லாமல் லாபம் தரும் துறையாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
- Oct 17, 2025 14:31 IST
சென்னை- மதுரை ஏர் இந்தியா விமானம் 2 மணிநேரம் தாமதம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, மதுரை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 2 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை, டெல்லி செல்லும் விமானங்கள் 2 மணிநேரம் தாமதத்துக்கு காரணம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவிக்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஏர் இந்தியா விமானத்தில் மதுரை செல்லவிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தவிப்புக்குள்ளாகி உள்ளார்.
- Oct 17, 2025 14:30 IST
சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நவ.7க்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நவம்பர் 7க்கு ஒத்திவைத்தது. சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விஜயபாஸ்கர், ரம்யா ஆஜராகாத நிலையில், வழக்கை நவம்பர் 7க்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
- Oct 17, 2025 14:17 IST
யு.பி.ஐ. மூலமே 85% டிஜிட்டல் பணப்பரிமாற்றம்: ஆர்.பி.ஐ தகவல்
இந்தியாவில் யு.பி.ஐ. மூலமே 85% டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரு மாதத்துக்கு ரூ.25 லட்சம் கோடி பணம் யு.பி.ஐ. மூலமே பரிமாற்றம் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 17, 2025 14:16 IST
ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு பல்கலை. மசோதாவுக்கு அனுமதி தர உத்தரவிடக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்த உத்தரவுக்கு எதிராக ஜனாதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். ஜனாதிபதி 13 கேள்விக்கு விளக்கம் கேட்டுள்ள விவகாரத்தில் முடிவு தெரிந்த பிறகு தமிழ்நாடு அரசின் மனு விசாரிக்கப்படும். 13 கேள்விகள் தொடர்பான விவகாரத்தில் நவ.21க்குள் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
- Oct 17, 2025 14:15 IST
"ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்புவது விதிமீறும் செயல்"
தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்புவது விதிமுறைகளை மீறும் செயல். ஒரு அரசை மட்டுமல்லாமல் நீண்ட கால இலக்குகளை அடிப்படையாக கொண்டு நிதிநிலை பொறுப்புடைமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றம் இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்ற அனைத்து உரிமையும் உள்ளது. 18 மாதங்களுக்கு பிறகு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின்படி மறு ஆய்வு செய்து சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்தார்.
- Oct 17, 2025 14:09 IST
தி.மு.க. ஆட்சி என்பது உருட்டு கடை அல்வா - எடப்பாடி பழனிசாமி
2021-ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; அதில் 10% கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் என்று கூறி, தி.மு.க. உருட்டு கடை அல்வா என்ற பெயரிலான காலி பாக்கெட்டுகளை எடப்பாடி பழனிசாமி காட்டினார். அ.தி.மு.க. உறுப்பினர்களும் அதைபோல் காலி அல்வா பாக்கெட்டுகளை கையில் வைத்திருந்தனர். பத்திரிகையாளர்கள் அதை கேட்டதும், எல்லாத்துக்கும் கொடுங்கப்பா என்று காலி அல்வா பாக்கெட்டுகளை எடப்பாடி பழனிசாமி ஆர்வமாக கொடுத்தார். இதனால், சட்டசபைக்கு வெளியே சிரிப்பலை எழுந்தது.
- Oct 17, 2025 13:37 IST
சாதி இரண்டொழிய வேறில்லை - ஸ்டாலின் பேச்சு
சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஔவை மொழியே தமிழ்நாட்டின் கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆணவப் படுகொலை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று உறுப்பினர்கள் கூறிய கருத்துகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கூறிய வள்ளுவர் பிறந்த மண் இது. பல சீர்திருத்த கருத்துகள் இயக்கமாகவே உருவெடுத்துள்ளன. கல்வி, வேலை வாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள் அனைவருக்கும் தருவதற்காகவே இந்த இயக்கங்கள் உருவாகின. சாதிக்கு மதத்துக்கு தந்த முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு தரும் சிந்தனையை திராவிட இயக்கங்கள் வழங்கின. இனமும் மொழியும் நமது அடையாளங்களாக மாற்றியதே நமது சாதனை. ஆணவக் கொலையை தடுக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.எம்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- Oct 17, 2025 13:32 IST
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Oct 17, 2025 13:32 IST
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கம் எட்டியுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு
14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நாம் திட்டமிட்டதைவிட பொருளாதாரம் 2% கூடுதலாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முன்னதாக கலைஞர் ஆட்சியில்தான் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று இருந்தோம். நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என அவர் தெரிவித்தார்.
- Oct 17, 2025 13:31 IST
ஆணவப் படுகொலைகளை தடுக்க ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா (ஓய்வு) தலைமையில் ஆணையம் - ஸ்டாலின் அறிவிப்பு
சாதிய ஆணவப் படுகொலை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சமூகங்களின் பெயர்களில் ‘ன்’ விகுதியை நீக்கி ‘ர்’ என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமரை சந்தித்தபோது கோரிக்கையை முன்வைத்தேன். எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது. உலகம் அறிவு மயம் ஆகிறது, ஆனால் அன்பு மயம் ஆவது தடுக்கப்படுகிறது.
ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும், அதன் அடிப்படையில் அரசு சட்டங்கள் இயற்றும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- Oct 17, 2025 13:31 IST
ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 600 நெல் மூட்டைதான் கொள்முதல் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார். - Oct 17, 2025 13:31 IST
கோல்ட்ரிப் நிறுவனத்தை ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை - மா.சு விளக்கம்
”கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை. 2019 முதல் 2022ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்த்த்துள்ளார். - Oct 17, 2025 13:29 IST
மீண்டும் இயங்கும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் - தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால் சுமார் 40 நிமிடங்கள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கிய நிலையில் தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது. - Oct 17, 2025 13:29 IST
சொந்தப் பயன்பாடு வாகனங்களை வணிகப் பயன்பாட்டில் ஈடுபடுத்தக் கூடாது - போக்குவரத்துத்துறை
தீபாவளியையொட்டி சொந்தப் பயன்பாடு வாகனங்களை விதிகளை மீறி வணிகப் பயன்பாட்டில் ஈடுபடுத்தினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பொழுது பயணிகளை கட்டண அடிப்படையில் ஏற்றிச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. - Oct 17, 2025 13:29 IST
சுங்கச் சாவடி சூறையாடப்பட்ட வழக்கு - த.வா.க-வின் 12 பேர் விடுதலை
2018 -ஆம் ஆண்டு உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி சுங்கச் சாவடி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தில் சூறையாடப்பட்ட வழக்கில் இன்று சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட 12 பேரை விடுதலை செய்து உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. - Oct 17, 2025 13:29 IST
பீகார் தேர்தல் - நிதிஷ்குமாருக்கு அதிர்ச்சி அளித்த அமித்ஷா
பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும். லாலு பிரசாத் ஆட்சியை பார்த்த மக்கள் அக்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தரமாட்டார்கள் என்று தனியார் ஊடக நேர்காணலில் ம்த்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். - Oct 17, 2025 13:28 IST
விக்கிரவாண்டி சோதனைச்சாவடியை கடந்த 46,172 வாகனங்கள்
தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். ஒரே நாளில் கூடுதலாக 16,000 வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி பயணம் செய்துள்ளன. கடந்த 33 மணி நேரத்தில் விக்கிரவாண்டியை 46,172 வாகனங்கள் கடந்தன. - Oct 17, 2025 13:28 IST
அ.தி.மு.கவின் 54-வது ஆண்டு தொடக்க விழா
அ.தி.மு.க-வின் 54வது தொடக்க விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். - Oct 17, 2025 13:28 IST
சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம் - போக்குவரத்துறை எச்சரிக்கை
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல வணிக உரிமம் இல்லாத வாடகை கார் பயன்பாடு அதிகரிப்பு எதிரொலியாக, சட்டத்திற்கு புறம்பாக சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. - Oct 17, 2025 13:28 IST
கூட்ட நெரிசல் வழக்கு - சி.பி.ஐ கரூர் வருகை
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் இன்று கரூர் வருகின்றனர்.ஐ.பி.எஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ அதிகாரிகள், சி.பி.ஐ ஏ.டி.எஸ்.பி முகேஷ்குமார், டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் ஆகியோரும் கரூர் வருகை தர உள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் குறித்து இன்று அல்லது நாளை சி.பி.ஐ விசாரணை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.