தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 23-ம் தேதி முதல் பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், வேறு வழித்தடத்தில் மாற்றப்பட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மீண்டும் தாம்பரம்- கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று(சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை ஏற்கனவே அறிவித்தது போலவே காலை 9.20 மணி முதல் மதியம் 1 30 மணி வரையிலும், இரவு 10 30 மணி முதல் அதிகாலை 2 45 மணி வரையிலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
தற்போது கூடுதலாக சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19, 9, 9.22, 9.40, 9.50 மாலை 6.26, இரவு 7.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
அதநேரம் ஏற்கனவே அறிவித்திருந்த சிறப்பு ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.45, 10, 10.15, 10.30, 10.45, 11, 11.15, 11.30, 11.45, மதியம் 12, 12.15, 12.30, 12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்படும்.
இதேபோல் பல்லாவரத்தில் இருந்து காலை 10.17, 10.32, 10.47, 11.02, 11.17, 11.32, 11.47 மதியம் 12.02, 12.17, 12.32, 12.47, 1.02, 1.17, 1.42 இரவு 11.30, 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும். அதேநேரம் செங்கல்பட்டு-கூடுவாஞ் சோி, கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் நேரத்தில் எந்த மாற்றமும் கிடையாது
இன்று(சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை செங்கல்பட்டிலிருந்து காலை 7.45, 8.05, 8.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரயிலும், அரக்கோணத்தில் இருந்து மாலை 5 15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரெயிலும், அதற்கு மாற்றாக தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான ரயில்களை போல அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் இயக்கப்படும். இன்று(சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 8.26, 8.39 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மகளிர் சிறப்பு மின்சார ரயில், அதற்கு மாற்றாக அனைவரும் பயணிக்கும் மின்சார ரயிலாக இயக்கப்பட உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுவாஞ்சேரி-பல்லாவரம் இடையே இயக்கப்படும் பகல் மற்றும் இரவு ரயில்கள் இந்த நாட்களில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“