/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-28T155258.549.jpg)
chennai lockdown news
chennai lockdown chennai lockdown news : தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவலை தடுக்க ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், கொரோனா பாதிப்புதொடர்ந்து அதிகரித்து வருகிறது.நாள்தோறும் ஏறத்தாழ 6 ஆயிரம்பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு இன்று மாலையே அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே, ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிக்கவேண்டும், இ-பாஸை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், 8-ம் கட்டமாக ஊரடங்கை செப்டம்பர் மாதமும் நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். மாவட்டவாரியாக தொற்று நிலவரம், தடுப்புப் பணிகள் குறித்து விவாதிப்பதுடன், ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அவர்களின் கருத்துகளை கேட்டறிகிறார்.
ஏற்கெனவே,ஊரடங்கை நீட்டிக்க வேண்டாம்என்று முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தொற்றைகருத்தில்கொண்டு சில தளர்வு களுடன் மீண்டும் ஊரடங்கு ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர், இன்று மாலை அல்லது நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.