Advertisment

இ-பாஸ் இல்லாமல் ஆம்புலன்சில் சென்ற பயணிகள்: வண்டலூரில் போலீஸ் மடக்கியது

சென்னையில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இ - பாஸ் வாங்காமல் தனியார் ஆம்புலன்சில் பயணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, chennai, doctor, corona infection, ambulance, video, viral video,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,

private ambulance ,chennai Lockdown , E-pass

இ- பாஸ் வாங்காமல் தனியார் ஆம்புலன்ஸ் வண்டி மூலம்   திருவள்ளூர் மாவட்ட திருவேற்காடு நகராட்சியில் இருந்து விழுப்புரம் செஞ்சி வரை பயணம் மேற்கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் 7 பேரை செங்கல்பட்டு காவல்துறை கைது செய்தது.

Advertisment

கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் ஜூன் 30-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்,  மற்ற மாவட்டத்தில் இருந்து சென்னைக்குள் வரவும், சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணிக்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், தனியார் ஆம்புலன்ஸில் 85 வயது முதியர் உட்பட்ட 7 பேர் திருவேற்காடில் இருந்து இ- பாஸ் இல்லாமல்  விழுப்புரம் செஞ்சிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதற்கு, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முன்பணமாக ரூ. 7,000 பெற்றுக் கொண்டார். மீதி பணத்தை தாங்கள் சேர வேண்டிய இடத்திற்கு சென்றவுடன் தருவாக பயனாளிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நேற்று காலை 10.30 மணியளவில், வண்டலூர் அருகே காவல்துறை அதிகாரிகள்  சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்த போது, தனியார் ஆம்புலன்ஸ் வண்டி நிற்காமல், படுவேகமாக சென்றது. இதனால், சந்தேகமடைந்த காவல்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் வண்டியை மடக்கியாதாக தி இந்து நாளிதழ் தெரிவித்தது.

ஆம்புலன்ஸ் வண்டியை சோதனையிட்ட காவல்துறையினர் 7 பேர் சட்ட விரோதமாக இ- பாஸ் வாங்கமால் பயணம் செய்ததை கண்டறிந்தனர்.  பயணத்தின் போது  காவல்துறையை நம்ப வைப்பதற்காக, 85 நிர்மபிய ஒருவரை  சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கைது செய்த காவல்துறை,இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment