chennai Lockdown lockdown Extended :தமிழத்தில் டிச.31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டித்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வந்த பொது ஊரடங்கு, டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தற்போது அமலில் உள்ள பொது முடக்கம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்தகட்ட பொதுமுடக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட பொது முடக்கம் டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கம் மற்றும் புதிய தளர்வுகள் குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை!
வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
சுற்றுலாத்தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. விடுதிகளும் செயல்படும்.
அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிசம்பர் 1 முதல் 31 வரை நடத்த அனுமதிக்கப் படுகிறது
பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”