சென்னை மாதவரத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
Chennai fire accident : சென்னை மாதவரம் பகுதியில், ரசாயன பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ரூ.100 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் பகுதியில், ரசாயன பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ரூ.100 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Advertisment
சென்னை, மாதவரத்தில், புறநகர் பேருந்து நிலையம் எதிரே, அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான குடோன் உள்ளது.இங்கு, 2,500 பிளாஸ்டிக் பேரல்களில், ரசாயன பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. பிப்ரவரி 29ம் தேதி , 3:15 மணி அளவில், இந்த குடோன் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. காற்றின் வேகத்தால், தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது.வேகமாக எரிந்த தீயில், ரசாயன பேரல்கள் வெடித்து சிதறின.
பல பேரல்கள், வெடித்து சிதறியதில், ஆகாயத்தில் பறந்து, குடியிருப்பு பகுதிகளில் விழுந்தன. இதனால், குடோனுக்கு அருகில் இருந்த, சில தொழிற்சாலை மற்றும் வீடுகளிலும் தீப்பிடித்தது. அப்பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் எரிந்தன. அங்கிருந்த வாகனங்களும் தீயில் சிக்கின. தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
தீயைணப்புப்படை ஐஜி சைலேந்திரபாபு, சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு பணிகளை பார்வையிட்டார். தீவிபத்து நிகழ்ந்தது ரசாயன குடோன் என்பதால், நுரை வகை தீயணைப்ப்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.
தீவிபத்து நிகழ்ந்து 13 மணிநேரங்கள் கடந்த நிலையிலும், தீ பலபகுதிகளில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. தீயின் தீவிரம் கட்டுக்குள் உள்ளதால், மார்ச் 1ம் தேதி அதிகாலை நேரத்தில் தீயணைக்கும் பணி சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு பணி தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
ரூ.100 கோடி சேதம் : ரூ.100 மதிப்பிலான சேதம், இந்த தீவிபத்தினால் ஏற்பட்டுள்ளதாக அந்த குடோனின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil