5 நிமிடத்தில் மூடிய தேஜஸ் ரயிலியின் கதவு.. பரிதவித்து போன தந்தை! இனி இந்த தவறை செய்யாதீர்கள்

மற்றவர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Chennai-Madurai Tejas Express : சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில், கடந்த நவம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட தேஜஸ் அதிவிரைவு ரயிலில் மொத்தம் 15 பெட்டிகள் உள்ளன . ஒவ்வொரு இருக்கையின் பின்புறம் சிறிய வீடியோ திரைகள், பொருத்தப்பட்டுள்ளன. தானியங்கி டீ,காபி இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன

ரயில் பெட்டியில் ஜி.பி.எஸ் வசதி, எல்.ஈ.டி விளக்குகள் வசதியுடன், உள் மற்றும் வெளி புறத்தில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.சென்னை-மதுரை இடையேயான 495 கி.மீ தூரத்தை இந்த ரயில் வெறும் 6 மணிநேரம் 30 நிமிடங்களில் இணைக்கிறது. 2018-ம் நிதியாண்டின் பட்ஜெட்டில் இந்த ரயில் சேவையைக்குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மக்களிடையே இந்த ரயிலுக்கு ஏகப்பட்ட வரவேற்புகள் உள்ளன. அதே சமயம் மக்களுக்கு பரீட்சையப்படாத தெளிவான அறிவிப்பு இல்லாத சில வசதிகளால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. அதுக் குறித்து விழிப்புண்ர்வு தான் இந்த செய்தி.

தேஜஸ் சொகுசு ரயிலை பொருத்தவரையில் தமிழகத்தில் இதுவரை எந்த ரயிலிலும் அறிமுகப்படுத்தாத வசதி தானியங்கி கதவு. இந்த கதவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்றால், ரயில் புறப்படுவதற்கு சரியாக 5 நிமிடம் முன்பு ரயில் கதவுகள் தானாகவே மூடி விடும். அதன் பின்பு யார் நினைத்தாலும் கதவை திறக்க இயலாது.

கடைசி நேரத்தில் ரயிலை பிடித்து விபத்தில் சிக்குதல்,படிக்கட்டில் நின்று பயணம் செய்தல் போன்ற ஆபத்தான பயணங்களை தவிர்க்க இதுப்போன்ற வசதி அறிமுகப்படுத்துள்ளது. ஆனால் இதும் குறித்து தெளிவான விபரங்கள் தெரியாத பயணிகள் சிலர் தேவையற்ற இன்னல்களை சந்திக்கின்றனர்.

கடந்த வாரம், தனது மகளுடன் 55 வயது மதிக்கதக்க நபர் ஒருவர், சென்னை மதுரை தேஜ்ஸ் ரயிலில் பயணிக்க எழும்பூர் ரயில் நிலையம் வந்தனர். சரியாக காலை 6 மணிக்கு ரயில் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நபர் 5.53 மணிக்கு ரயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றார். ஆனால் அவர் வருவதற்கு 5.55 மணி ஆகி விட்டது. அதே நேரம் 5. 55 மணிக்கு ரயிலியின் கதவுகள் மூடப்பட்டன.

எவ்வளவு முயன்றும் அவரால் கதவை திறக்க முடியவில்லை. ரயில் உள்ளே இருந்த அவரின் மகளாலும் கதவை திறக்க முடியவில்லை. இருவரும் செய்வதறியாமல் தவித்தனர். கடைசியில் ரயில் 6 மணிக்கு புறப்பட்டு சென்றது. கீழே இறங்கிய அவரால் கடைசி வரை ரயிலில் ஏற முடியவில்லை.

முன் அறிவிப்பு இன்று ரயில் கதவுகள் மூடப்பட்டதால் தான் இந்த பிரச்சனை என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இந்த பிரச்சனையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இனிவரும் காலங்களின் தேஜஸ் ரயிலில் பயணிப்பவர்கள் இந்த தவறை செய்யாதீர்கள். மற்றவர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close