சென்னை: நடுரோட்டில் மாணவனை தாக்கும் சக மாணவர்கள்... பதர வைக்கும் வீடியோ!

சென்னை மதுரவாயலில் தனியார் கல்லூரி மாணவர் ஒருவரை 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தும் பதர வைக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயலில் தனியார் கல்லூரி மாணவர் ஒருவரை 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தும் பதர வைக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Maduravoyal college students attack Fellow student middle of the road Tamil News

மதுரவாயல் கல்லூரி மாணவர்கள் சக மாணவரை நடுரோட்டில் தாக்கிய அதிர்ச்சி அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை மதுரவாயலில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்த  பல்கலைக் கழகத்தில் லிதாம்பிகை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஏரளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

Advertisment

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்து மாணவர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு மாணவர் மீது 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

சட்டை கிழிந்து கீழே விழுந்த அந்த மாணவரை அங்கிருந்த சக மாணவர்கள் எழுப்பி அழைத்துச் சென்றனர். காயத்துடன் அந்த மாணவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த மாணவர் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: சக்தி சரவணன் - சென்னை  

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

College Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: