பாலியல் புகார்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் கைது

school teacher arrested: மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா பள்ளி ஆசிரியர் ஆனந்தனை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

school teacher anandhan

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா பள்ளி ஆசிரியர் ஆனந்தனை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இயங்கி வரும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆனந்தன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்து முன்னாள் மாணவிகள் சிலர் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் மே28ஆம் தேதி ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்தது.

இந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. ஆசிரியர் ஆனந்தன் மீது காவல்நிலையத்துக்கு தனிப்பட்ட புகார்கள் வராததால் இந்த வழக்கு விசாரணை தேக்கமடைந்தது.

இந்நிலையில், அப்பள்ளியில் 2014ல் பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அப்பள்ளியில் பயின்ற போது ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai maharishi vidya mandir school teacher arrested posco act

Next Story
சென்னையில் இந்த 3 பகுதிகளில் குறையாத கொரோனா; மாநகராட்சி தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம்Chennai corona virus, daily reports
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com