மார்ஃபிங் போட்டோ வெளியிடுவதாக மாடல் அழகிக்கு மிரட்டல்… பாலியல் தொந்தரவு அளித்த நபர் கைது!

மாடல் அழகியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்த 26 வயது இளைஞரை சென்னை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Chennai Man arrested, man arrested for blackmailing Model with her morphed photos for sexual favours, மார்ஃபிங் போட்டோ வெளியிடுவதாக சென்னை மாடல் அழகிக்கு மிரட்டல், பாலியல் தொந்தரவு அளித்த நபர் கைது, சென்னை, மாடல் அழகி, Chennai, model and father gives police complaint, tamilnadu

சென்னையைச் சேர்ந்த மாடல் அழகியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்த 26 வயது இளைஞரை சென்னை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சென்னை மாடல் அழகிக்கு மிரட்டல் விடுத்த நபர் திருப்பூரைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ரஞ்சித் என்று தெரியவந்துள்ளது.

சென்னை மாடல் அழகியை ஆபசமாக சித்தரித்து மார்ஃபிங் செய்யப்பட்ட போட்டோவை வெளியிடுவதாக மிரட்டி அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் ரஞ்சித் கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் வட்டாரம் கூறியதாவது:

சென்னை கொளத்தூர் அருகே வசிக்கும் மாடல் அழகி ஒருவருடன் ரஞ்சித்துக்கு நட்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணுக்கு பலமுறை போன் செய்து, தனக்கு சினிமா துறையில் உள்ள தொடர்புகள் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார். பின்னர், ரஞ்சித்தின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த பெண், அவரை தவிர்க்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

“குற்றம் சாட்டப்பட்ட நபர் மற்றொரு எண்ணிலிருந்து தீக்ஷ் குப்தா என்ற மாடல் அழகி என்ற பெயரில் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டார். அந்த பெண்ணிடம் மாடலிங் படங்களை அனுப்புமாறும் நானும் ஒரு பெண் மாடல் என்று நம்புகிறவிதமாக கேட்டுள்ளார். இதையடுத்து, அந்த பெண் தனது புகைப்படங்களை அனுப்பியிருக்கிறார். அந்த புகைபடங்களை குற்றம் சாட்டப்பட்ட நபர் மார்பிங் செய்து அவரை அச்சுறுத்த பயன்படுத்தி இருக்கிறார்கள்.” என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த பெண்ணும் அவரது தந்தையும் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், அண்ணாநகர் சைபர் கிரைம் குழுவினரின் உதவியுடன் ரஞ்சித்தை கண்டுபிடித்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், ரஞ்சித் சென்னை பெரும்பாக்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நிறுவனம் நடத்தி வருவது தெரிந்தது. கைது செய்யப்பட்ட ரஞ்சித் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai man arrested for blackmailing model with her morphed photos for sexual favours

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com