Advertisment

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக மோசடி; ரூ.1.8 லட்சத்தை இழந்தவர் காவல்துறையில் புகார்

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி என சென்னையைச் சேர்ந்தவர் காவல்துறையில் புகார்; இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என போலீசார் விசாரணை

author-image
WebDesk
New Update
cyber crime

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி என சென்னையைச் சேர்ந்தவர் காவல்துறையில் புகார்; இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என போலீசார் விசாரணை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் IRCTC இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக தியாகராய நகர் காவல் துணை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதரன் தனது புகாரில், பயண டிக்கெட்டை ரத்து செய்வதற்காக IRCTC இணையதளத்தில் உதவி (For Help) என்று பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற எண்ணுக்கு அழைத்துள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் வங்கி விவரங்களை வழங்க கேட்டுள்ளார். ஸ்ரீதரன் தனது வங்கி விவரங்களை வழங்க, சில நிமிடங்களில் ஸ்ரீதரன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் IRCTC இணையதளத்தில் பதிவிடப்பட்டு இருந்த மொபைல் நம்பர், ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என்பது குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment