scorecardresearch

சென்னை அரசுப் பள்ளி ஒப்பந்த ஆசிரியை தற்கொலை.. காரணம் என்ன?

சென்னை அருகே உள்ள அரசுப் பள்ளியில் ஒப்பந்த ஆசிரியையாக பணி செய்த ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

Chennai Mangadu Govt temporary teacher commits suicide
மாங்காடு அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியை பியூலா என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை மாங்காட்டில் உள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் பியூலா. இவர் வீடுகள் தோறும் கல்வித் திட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி புகட்டி வந்தார்.
இந்த நிலையில் பியூலா மாங்காட்டில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையில் பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியை பியூலைவை தரக்குறைவாக திட்டினார் என்றும் இதனால்தான் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டது.
இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பியூலா உறவினர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் சென்று அந்த பெண் ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரை தாக்க முயன்றனர்.

மேலும் அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், மாங்காடு போலீசார் சக ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரிடம் பியூலா மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தற்காலிக ஆசிரியை பியூலா சக ஆசிரியை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்னையா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் கூறினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai mangadu govt temporary teacher commits suicide

Best of Express