சென்னையில் 3 வயது சிறுவனை மாஞ்சா நூல் அறுத்த சிசிடிவி காட்சி (வீடியோ)

சென்னையில் நேற்று தந்தையுடன் பைக்கில் சென்றபோது 3 வயது குழந்தையின் கழுத்தில் பட்டம் விடும் மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தை உயிரிழந்தது. பதைபதைக்க வைக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.  சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கோபால், நேற்று (நவ.3) மாலை தனது 3 வயது…

By: November 4, 2019, 3:53:42 PM

சென்னையில் நேற்று தந்தையுடன் பைக்கில் சென்றபோது 3 வயது குழந்தையின் கழுத்தில் பட்டம் விடும் மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தை உயிரிழந்தது. பதைபதைக்க வைக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கோபால், நேற்று (நவ.3) மாலை தனது 3 வயது மகன் அபினேஷ்வரனை அழைத்துக் கொண்டு கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகர் பாலத்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நூல் பைக்கின் முன்பகுதியில் அமர்ந்திருந்த அபினேஷ்வரனின் கழுத்தில் சிக்கியது. கண் இமைக்கும் நேரத்திற்குள் கழுத்தை அறுத்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத கோபால் பைக்கை நிறுத்தி விட்டு கதறி துடித்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீஸார் அபினேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அபினேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தந்தை கண் எதிரே 3 வயது மகன் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா தீவிர என சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறுவன் கழுத்தில் மாஞ்சா நூல் விழும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai manja 3 years old abhineshwaran boy dead cctv footage

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X