அம்பத்தூர், பட்டாபிராம் பகுதியில் பரமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே இயக்கப்படும் 103 புறநகர் ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு நடைபெற உள்ளது.
இதன் காரணமாக இன்று இரவு மற்றும் நாளை காலை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 9.25, 10.35, மணிக்கு பட்டாபிபுரம் வரை இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் இடையே இரவு 10 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஆவடி வரை இரவு 10.20, 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில், அரக்கோணம் செல்லும் ரயில்கள், 10.20, 11.45 மணிக்கு ஆவடி செல்லும் ரயில்கள், 11.15 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரயில், 11.55 மணிக்கு பட்டாபிராம் சைடிங் செல்லும் ரயில், திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு 10.10 மணிக்கு புறப்படும் ரயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரலுக்கு 10.50 மணிக்கு புறப்படும் ரயில்கள் என 19 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அதேபோல நாளை காலை 10 மணி வரை சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை – அரக்கோணம் வழித்தடத்தில் ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர், திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மொத்தம் 84 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை 103 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக குறிப்பிட்ட இடைவெளிகளில் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் 37 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“