Advertisment

பட்டினப்பாக்கத்தில் குவிந்த மக்கள்: மெரினா மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பாதை சேதம்

மாண்டஸ் புயலினால் நேற்று முதல் தொடரும் கடல் அலை சீற்றத்தால், சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதமடைந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Marina beach boardwalk for disabled people damaged Tamil News

Chennai Marina beach boardwalk for disabled people damaged due mandus cyclone Tamil News

Cyclone Mandous damages boardwalk for disabled people at Chennai Marina beach Tamil News: வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தீவிர புயலான மாண்டஸ் இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேசுகையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும். தீவிரப்புயலாக உள்ள மாண்டஸ் சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காரைக்காலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தீவிர புயலாக உள்ள மாண்டஸ் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். புயல் இன்று இரவுக்கும் நாளை அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும்" என்று கூறியுள்ளார்.

பட்டினப்பாக்கத்தில் குவிந்த மக்கள்

இதனிடையே, மாண்டஸ் புயலால் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பட்டினப்பாக்கம் கடல்பகுதியில் மக்கள் குவிந்து வருகின்றனர். கடல் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில், ஆபத்தை உணராமல் குவிந்துள்ளனர்.

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

மாண்டஸ் புயல் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும், அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெரினா மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பாதை சேதம்

publive-image

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையைக் கண்டுகளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மரப்பாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கடந்த மாதம் 27 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில் தான், மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகே செல்ல ஏதுவாக இதுபோன்ற மரப்பாதை அமைக்கப்பட்டது.

தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபாதை ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், மணற்பரப்பில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது. இந்த நடைபாதையில் சிரமம் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம்.

இந்த நிலையில், மாண்டஸ் புயலினால் நேற்று முதல் தொடரும் கடல் அலை சீற்றத்தால் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதமடைந்துள்ளது.

“சேதமடைந்த சிறப்பு பாதை சீர் செய்யப்படும்” - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல்

publive-image

இந்நிலையில், மாண்டஸ் புயலினால் சேதமடைந்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என்றும், ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Chennai Tamilnadu Marina Beach Udhayanidhi Stalin Cyclone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment