சென்னை லைட் ஹவுஸ் அருகே மெட்ரோ கட்டுமானப் பணி நடைபெறுவதால், பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை, மெரினா சர்வீஸ் சாலையில் போக்குவரத்து மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த மாற்றங்கள் இன்று முதல் ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லூப் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், சர்வீஸ் ரோடு வழியாக போர் நினைவு சின்னத்தை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காந்தி சிலைக்கு பின்னால் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வரை மட்டுமே இந்த வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
அங்கிருந்து, காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள், லைட் ஹவுஸ் சந்திப்பில், யூ-டர்ன் செய்து, வலதுபுறம் திருப்ப வேண்டும்.
இதேபோல், போர் நினைவுச் சின்னத்தில் இருந்து லூப் சாலையை நோக்கி எதிர்த் திசையில் செல்லும் வாகனங்களும் சர்வீஸ் சாலையில் செல்ல அனுமதிக்கப்படாது.
இந்த வாகன ஓட்டிகள் யூ-டர்ன் எடுத்து பின்னர் லாயிட்ஸ் சாலையில் இடதுபுறம் திரும்பி காமராஜர் சாலையை நோக்கி தங்கள் இலக்கை அடையலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil