பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சென்னையில் மே 17 இயக்கம் சார்ப்பில் பேரணி நடைபெற்றது.
பாலஸ்தீனத்தில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி 300-க்கும் மேற்பட்ட மக்கள், பெண்கள் உள்பட இந்த பேரணியில் பங்கேற்றனர். சென்னையில் நடைபெற்ற இந்த பேரணி மே 17 இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது.
பாலஸ்தீனின் காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் போர் தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்து வரும் நிலையில், பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.
இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே கடந்த 3 வாரங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலரை பிணையக்கைதிகளாக பிடித்தனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதற்கிடையே போரில் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வும் உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“