சென்னை மேயர் ஆர்.பிரியா ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு, திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகளைப் பற்றி கற்றுக்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை) இரவு ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட இருக்கிறார். அங்கிருந்து, பிரான்ஸ் நாட்டிற்கு சென்று பின்னர் இத்தாலி செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கழிவு மேலாண்மைத் துறை தனியார் மயமாக்கப்பட்டு வருவதாகவும், குப்பை சேகரிப்பு மற்றும் செயலாக்க சேவைகளை மேம்படுத்தவும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு இந்த பயணம் உதவும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மேயருடன் துணை மேயரான மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இப்பயணத்திற்கு பின்பு, வருகின்ற ஜூன் 24ஆம் தேதி சென்னை திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்பற்றி மேயர் பிரிய கூறியதாவது: "நாங்கள் முதலில் ஸ்பெயினில் உள்ள (Urbaser) தலைமை அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் செய்யத் தொடங்குவதற்கு சில ஆலோசனை பெற முடிவு செய்துள்ளோம்", என்றார்.
மேலும், "குப்பை இல்லாத நகரத்தை ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை கற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil