New Update
/indian-express-tamil/media/media_files/jxEN5vhdQ3zST1xZ4Fx4.jpg)
Chennai
Chennai
சென்னை மேயர் பிரியா ராஜன், ஜிம்மில் சிரித்துக்கொண்டே வொர்க்அவுட் செய்யும் வீடியோ இப்போது வைரல் ஆகியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில், இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மாநகரம் முழுவதும் இலவச உடற்பயிற்சிக் கூடங்களைத் திறந்து, பராமரித்து வருகிறது.
மேலும்,கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ரூ.10 கோடி மதிப்பில் பெண்களுக்கென பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும், என்று மேயர் பிரியா அறிவித்திருந்தார்.
Video Credit: Thanthi TV
சென்னையில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட உள்ளது.
டிரெட்மில், சைக்கிளிங் மற்றும் இஎப்எக்ஸ் இயந்திரங்கள், ஹைடிராலிக் வெயிட் லிப்டிங் மெஷின் என அனைத்து உபகரணங்கள் மற்றும் குடிநீர் வசதி, பாதுகாவலர்கள் என அடிப்படை வசதிகளும் இந்த உடற்பயிற்சிக் கூடங்களில் அமைய உள்ளன.
இந்நிலையில் சென்னை வெங்கு தெருவில், மாநகராட்சி சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர்.
உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த பிறகு மேயர் பிரியா அங்கு வொர்க் அவுட் செய்யும் வீடியோ இப்போது இணையத்தில் பலரைக் கவர்ந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.