Advertisment

விபத்தில் சிக்கிய மேயர் பிரியா; கார் டிரைவருக்கு காயம்!

சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்தில் மேயர் பிரியாவுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Mayor Priya car accident

சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

priya | Greater Chennai Corporation | சென்னை அருகே மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மேயர் பிரியா கார் டிரைவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மேயர் பிரியா எந்தக் காயமும் இன்றி அதிருஷ்டவசமாக தப்பியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

மேயர் பிரியா சாலையில் காரில் பயணித்த போது அவருக்கு முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியுள்ளது. இதனால் பிரியா சென்ற கார் அதன்மீது மோதியது.

இந்த நிலையில் பின்னால் வந்த லாரி பிரியா கார் மீது மோதியது. இந்த விபத்தில் காயமுற்ற பிரியா கார் ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை மேயர் பிரியா கார் விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவ பகுதியில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Greater Chennai Corporation priya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment